தமிழர் பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் நம்ம ஊர் ஆன்லைன் நிறுவனம் பற்றிய சிறப்பான தொகுப்பு
சென்னை: கல்வெட்டுகள் முதல் ஓலைச் சுவடி வரை, தமது வாழ்க்கைக் கூறுகளை உலகிலேயே வேறு எந்த இனத்தையும் விட சிறந்த முறையில் ஆவணப்படுத்தி வந்தனர் தமிழர்கள் என்றால் அது மிகை ஆகாது. ஆனால் கடந்து சில நூற்றாண்டுகளாக நாம் ஆவணப் படுத்துதலின் முக்கியத்துவத்தை உணராமல் நடந்து வந்து இருக்கிறோம்.
இதனால் இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும் பல பாரம்பரிய விடயங்கள் ஒவ்வொரு நாளும் ஆவணப்படுத்தப் படாமல் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் மறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் இன்று காலம் மாறி வருகிறது. இன்றைய புது யுக நிறுவனங்கள் இதற்கான முக்கியத்துவத்தினை உணர்ந்து அதற்கான சரியான முன்னெடுப்பிலும் களம் இறங்கி உள்ளார்கள் என்பதற்கு நேட்டிவ்ஸ்பெஷல்(nativespecial.com) இணையத்தின் பொங்கலுக்கான இந்த வருட சிறப்பு பரிசே சான்றாகத் திகழ்கிறது.
நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான 'சேவல்கட்டு' பற்றி மிகச் சிறந்த ஆவணக் குறிப்பேட்டினைத் தயார் செய்து அதனை இந்தப் பொங்கலுக்கான ஒவ்வொரு ஆர்டரிலும் இலவசமாக இணைத்து அனுப்பும் முயற்சியினைத் துவங்கி இருக்கிறார்கள்.

'சேவல்கட்டு' என்பதன் அடிப்படைக் காரணி பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கம், மிகச் சிறந்த சேவல் வகைகளைப் பற்றிய சிறப்பு ஒரிஜினல் புகைப்படங்கள், சேவற்கட்டு வகைகள், இந்தளூர் நடுகல் உள்ளிட்ட வரலாற்றுக் குறிப்புகள், சேவல் வகைகளைப் பற்றிய குறிப்புகள் என ஒரு சிறப்பான தொகுப்பாக இதனைத் தருகிறார்கள்.

இதனைப் பற்றி அவர்களிடம் கேட்ட பொது "நமது பாரம்பரிய கலை, இலக்கியம், பயன்பாடு, விளையாட்டு என நமது பாரம்பரிய விழுமியங்களை ஆவணப்படுத்துவதையும் ஒரு முக்கியக் கூறாக வைத்தே எமது நேட்டிவ்ஸ்பெஷல் (nativespecial.com) இணையம் தொடர்ந்து செயல்படும். இதன் பகுதியாகவே "தமிழர் உணவின் அறிவியல்" எனும் தொடரினை வெற்றிகரமாக தொகுதித்தோம்.

அது போல இந்த பொங்கலுக்கு 'சேவல்கட்டு' பற்றய வரலாற்று ஆவணக் குறிப்பினை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று உறுதியாகக் கூறினர்.
இந்தப் பொங்கலுக்கு பொங்கல் பானை காம்போ, பாராபரிய உருண்டைகள் காம்போ, வீட்டு சுவை அதிரசம், நாட்டு மிக்ஸர், இனிப்பு சீடை என நம் கிராமத்துப் பண்டங்களின் சிறப்பு காம்போ என களைகட்டி இருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் (nativespecial.com) இணையம்.

கூடவே சேவல்கட்டு பற்றிய குறிப்பேடும் அனைத்து ஆர்டர்களிலும் இலவசமாக அனுப்பப்படும். இது போன்ற மண் சார்ந்த முயற்சியினை இன்றைய இளைஞர்கள் சிறந்த முறையில் முன்னெடுப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.
நாமும் நம்மால் இயன்ற வரை நமது பாரம்பரிய விழுமியங்களை ஆவணப் படுத்துவோம்.
இந்த பொங்கலுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, லண்டன், அமீரகம் என அனைத்து நாடுகளுக்கும் நேட்டிவ்ஸ்பெஷலின் சிறப்புப் பண்டங்களை ஆர்டர் செய்து சிறந்த முறையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வாழ்த்துகள்!
For More Details: www.nativespecial.com
RECOMMENDED STORIES