உறுதிமொழி... இந்தியாவை ‛இந்து நாடாக்குவோம்’... ஹரியானா பாஜக எம்எல்ஏ செயலால் பரபரப்பு
சண்டிகர்: ‛‛இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம். இதற்கு தியாகம் செய்யவும் தயாராக இருப்போம்'' என ஹரியானா பாஜக எம்எல்ஏ அசீம் கோயல் தனது கட்சியினருடன் உறுதிமொழி ஏற்ற வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். மாநிலத்தில் உள்ள அம்பாலா நகர் எம்எல்ஏவாக இருப்பவர் அசீம் கோயல் உள்ளார். இவரும் பாஜகவை சேர்ந்தவர்.
இந்நிலையில் அம்பாலா நகரில் உள்ள அகர்வால் பவனில் பொது சிவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அசீம் கோயல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‛‛இந்தியா இந்து நாடாக மாற வேண்டும். இதற்காக எத்தனை தியாகங்களை வேண்டுமானலும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய இடைவிடாது உழைக்க வேண்டும். இதற்கு உதவி செய்ய தெய்வங்களும், முன்னோர்களும் நமக்கு வலிமை தர பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என பேசினார்.
அதன்பிறகு எம்எல்ஏ அசீம் கோயல் தலைமையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கைகளை நீட்டி உறுதிமொழி ஏற்றனர். அப்போது அவர்கள், ‛‛இந்தியாவை இந்து நாடாக ஆக்குவோம். இது இந்து நாடாக தான் இருக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உறுதியளிக்கிறோம். தேவைப்பட்டால் தியாகங்களையும் செய்வோம்'' என கூறினர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இதுபற்றி அசீம் கோயலிடம் கேட்டதற்கு, ‛‛நான் எம்எல்ஏவாக இல்லாமல் ஒரு இந்துவாக உறுதிமொழி ஏற்று கொண்டுள்ளனே். இதில் தவறு இல்லை. மாறாக பெருமை கொள்கிறேன்'' என்றார்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு அசீம் கோயலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்தேவ் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் 2019ல் நடந்த தேர்தலில் 2வது முறையாக அம்பாலா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications