சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீ பிடித்து எரிந்த கார்.. தலையில் காயத்துடன் ஓடிய பண்ட்.. விபத்து எப்படி நடந்தது? பரபர பின்னணி

Google Oneindia Tamil News

சண்டிகர்: உத்தரகாண்டில்கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பண்ட் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் அதிகாலையில் 7 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக அவமதிப்பட்டு வருகின்றனர். முக்கியமாக அதிகாலை நேரங்களில் இந்த குளிரில் வாகனம் ஓட்டுவது மிக கடினமான காரியமாக மாறி உள்ளது.

அதிகாலை நேரங்களில் அதிக அளவில் பனி நிலவுகிறது. இதனால் சாலையில் வாகனம் ஓட்டுவது சிரமமான காரியமாக மாறியள்ளது.

பனி

பனி

வடமாநிலங்களில் காலை நேரங்களில் கூட பனி மூட்டம் காரணமாக பல இடங்களில் சாலைகள் இருட்டாக இருந்தன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு வடமாநிலங்களை உலுக்கி வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் சென்ற காரும் பனிமூட்டம் காரணமாகவே விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று இருக்கிறார். வங்கதேசம் தொடர் முடிந்து டெல்லிக்கு இவர் வந்துள்ளார். அதன்பின் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சாலை தெரியவில்லை

சாலை தெரியவில்லை

இதையடுத்து இன்று அதிகாலை திரும்பி காலை பண்ட் டெல்லிக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. டெல்லியில் இன்று பிற்பகல் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், நாளை புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பண்ட் டெல்லி திரும்பி இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் டெல்லி திரும்பும் வழியில் ரூர்கி என்ற இடத்தில் கார் விபத்து உள்ளாகி இருக்கிறது. அதிகாலை 7 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிஎம்டபிள்யு காரில் அவர் மட்டும் தனியாக காரை ஓட்டிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

 தூக்க கலக்கம்

தூக்க கலக்கம்

பண்ட் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம், சீட் பெல்ட் அணியாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சாலையில் பனி மூட்டம் இருந்ததால் பண்டிற்கு சாலை தடுப்பு தெரியவில்லை. நடுவில் சாலை சந்திப்பு வரும் இடத்திற்கு அடுத்து இருந்த சாலை தடுப்பை பார்க்காமல் அதில் நேராக கொண்டு போய் காரை மோதி இருக்கிறார் பண்ட். கார் மோதிய வேகத்தில் பண்டிற்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. கார் மோதியதோடு மட்டுமின்றி அப்படியே புரண்டு போய் பின் பக்கமும் சாலை தடுப்பில் மோதி இருக்கிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதில் பண்ட் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் தலையில் ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து பண்ட் உள்ளேயே வலியில் கிடந்துள்ளார். காரில் ஒரு பகுதியில் லேசாக தீ பிடித்துள்ளது. கார் விபத்து ஏற்பட்ட பகுதியில் நிறைய கடைகள் இருந்ததால் மக்கள் வந்து உடனே பண்டை வெளியே கொண்டு வர முயன்று உள்ளனர். அதற்குள் கார் தீ பிடிக்க தொடங்கியதால், பண்ட் வேக வேகமாக ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதையடுத்து ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் முதலில் சாக்சம் என்ற மருத்துவமனையில் முதலுதவி பெற்றார்.

ஓடினார்

ஓடினார்

ஆனால் அங்கு காயங்கள் மோசமாக இருப்பதாக கூறி உள்ளனர். இதையடுத்து அருகில் உள்ளே டெஹடூனில் இருக்கும் மேக்ஸ் ஹாஸ்ப்பிட்டலில் பண்ட் சேர்க்கப்பட்டார். இவருக்கு தலையிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு தலையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ள புகைப்படங்கள், ரத்த கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

English summary
How did Rishabh Pant car meet with an accident in Uttarkhand? What happened?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X