சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லிவ்-இன் உறவு சட்டவிரோதமானது இல்லை.. சமூகமும் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டது.. பஞ்சாப் ஐகோர்ட்

Google Oneindia Tamil News

சண்டிகர்: லிவ் இன் உறவு சட்டத்துக்குப் புறம்பானது இல்லை என்றும் லிவ்-இன் உறவில் இணைந்து வாழும் தம்பதிக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் லிவ் இன் உறவில் வாழும் தம்பதி, தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்,

Live-in relationships not prohibited by law says Punjab & Haryana HC

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, லிவ் இன் உறவு சட்டத்துக்குப் புறம்பானது இல்லை என்றும் லிவ்-இன் உறவில் இணைந்து வாழும் தம்பதிக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுதீர் மிட்டல் கூறுகையில், "நம் நாட்டில் அனைவருக்கும் தங்கள் விருப்பப்படி பிடித்தவருடன் திருமணம் செய்து கொண்டு வாழவும் அல்லது லிவ்-இன் உறவில் ஒன்றாக இணைந்து வாழவும் உரிமை உள்ளது. இதில் யாராலும் தலையிட முடியாது

பாஜக எம்எல்ஏவை... அடித்து துவைத்த பஞ்சாப் விவசாயிகள்... அரசியல் கட்சிகள் கண்டனம்.. வைரல் வீடியோபாஜக எம்எல்ஏவை... அடித்து துவைத்த பஞ்சாப் விவசாயிகள்... அரசியல் கட்சிகள் கண்டனம்.. வைரல் வீடியோ

இந்தியாவில் லிவ்-இன் உறவு சட்டத்துக்கு விரோதமானது இல்லை. எனவே, லிவ் இன் உறவில் வாழ்பவர்களுக்கு, நாட்டிலுள்ள மற்ற குடிமகன்களைப் போலவே பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் லிவ் இன் உறவுகளில் வாழ்பவர்களை சமூகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் லிவ்-இன் உறவில் வாழும் வேறு சில தம்பதிகள், போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி இதேபோல தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் வேறு இரண்டு அமர்வுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab & Haryana HC latest about live in Live-in relationships
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X