நவ்ஜோத்சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு- தேசபாதுகாப்புக்கே பெரும் ஆபத்து- அமரீந்தர்சிங் பகீர்
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது; அவரால் தேசபாதுகாப்புக்கே பெரும் ஆபத்து உள்ளது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நவ்ஜோத்சிங் சித்து, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ளார்.
மேலும் புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கியுள்ளது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தமது ஆதரவாளர்களுடம் அமரீந்தர்சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆளுமை அற்றவர் சித்து
இந்த நிலையில் நவ்ஜோசிங் சித்துவை, காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமரீந்தர்சிங் கூறுகையில், நவ்ஜோத்சிங் சித்து திறமையில்லாதவர்; ஆளுமையற்றவர். அவரால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்பட போகிறது. அவரது பெயரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

சித்துவுக்கு பாக். தொடர்பு
நவ்ஜோத்சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா ஆகியோர் நவ்ஜோத்சிங் சித்துவின் நண்பர்கள். ஆகையால்தான் அவரை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மேலும் என்னுடைய தேசத்தை பாதிக்கும் விவகாரம் என்பதால் சித்துவை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

சித்து -அமரீந்தர்சிங் மோதல் என்ன?
ஏற்கனவே நவ்ஜோத்சிங் சித்துவை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக்கவும் துணை முதல்வராக்கவும் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக டெல்லியில் பல முறை காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின்னர் மாநில கமிட்டித் தலைவராக சித்துவை நியமிக்க ஒப்புக் கொண்டிருந்தார் அமரீந்தர்சிங்.

சிக்சர் அடித்த சித்து
ஆனால் சித்து மாநில தலைவரான பின்னர் கட்சிக்குள் அமரீந்தர்சிங் மீதான அதிருப்தியை ஊதிப் பெருக்கிவிட்டார். மேலும் கேபினட் அமைச்சர்களையே அமரீந்தர்சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் வைத்தார். கடைசியாக அமரீந்தர்சிங்கை மாற்ற கோரி 50 எம்.எல்.ஏக்கள் கையெழுத்துப் போட்டு மேலிடத்துக்கு கடிதமே கொடுத்தனர். இதன் விளைவாகவே தமது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் அமரீந்தர்சிங். சித்துவைப் பொறுத்தவரையில் அமரீந்தர்சிங் ராஜினாமா சிக்சர்தான் என்பதில் சந்தேகமில்லை.

பாக். ராணுவ தளபதியை ஆரத் தழுவிய சித்து
பாகிஸ்தானின் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியர்கள் செல்ல கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார் நவ்ஜோத்சிங் சித்து. அப்போது பஞ்சாப் அமைச்சர் என்ற முறையில் சித்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் சித்துவின் இலாகாவை அமரீந்தர்சிங் மாற்றினார். இதில் கடுப்பாகிப் போன சித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications