பஞ்சாப் காங்கிரஸ் தோல்விக்கு நவ்ஜோத்சிங் சித்து தான் காரணமா?- ஆம் ஆத்மி வெற்றிக்கு காரணம் என்ன?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு நவ்ஜோத் சிங் சித்து தான் காரணம் என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபில் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்திய மக்களுக்கு வாழ்த்துகள் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கி, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

பஞ்சாப்
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 2017 தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டு 20 தொகுதிகளை வென்றது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து, ஆம் ஆத்மி சட்டசபை செல்ல இருக்கிறது.

ஆம் ஆத்மி
பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டது முதல், ஆம் ஆத்மி
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பகவந்த் மான் எளிமையான பேச்சு, டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு இருந்த பெயர், விவசாயிகள் போராட்டம் இதெல்லாம் சேர்ந்து வாக்குகளாக ஆம் ஆத்மிக்கு சென்றது.

காங்கிரஸ்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மிக மோசமாக தோற்றுள்ளது. கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தாலும், 18 இடத்தில் வெல்லும் என எந்த கருத்துக்கணிப்புகளும் கூறவில்லை. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து என எல்லோரும் ஆம் ஆத்மியிடம் தோற்றுள்ளார்கள்.

நவ்ஜோத் சிங் சித்து
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி விரைவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. தோல்விக்குப் பிறகு சித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''ஒரு புதிய அமைப்பை பஞ்சாப் மாநிலத்துக்கு அறிமுகப்படுத்திய மக்களுக்கு வாழ்த்துகள். மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு. மக்களின் இந்த தீர்ப்பை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் பஞ்சாப் காரன், இங்கு தான் இருப்பேன். எங்கும் செல்ல மாட்டேன். வெற்றியோ தோல்வியோ பஞ்சாப் மீது எனக்கு இருக்கும் அன்பை ஒருபோதும் மாற்றாது'' எனத் தெரிவித்தார்.

தோல்விக்கு காரணம்
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு சித்து தான் காரணம் என சொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினரே. முதல்வர் பதவி தராதது, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாதது, என மனக்கசப்பில் இருந்துள்ளார் சித்து. இதனால் கட்சி வேலைகளில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. சித்துவுக்கும் முன்னாள் முதல்வர் அமரீந்தருக்கும் ஏற்பட்ட பனிப்போரில், அமரீந்தர் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவர் கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் சித்து மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications