பஞ்சாப் சட்டசபை தேர்தல்: ஜன.3 முதல் ராகுல் காந்தி பிரசாரம்... முடிவுக்கு வருமா உட்கட்சி பஞ்சாயத்து?
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ஜனவரி 3-ந் தேதி முதல் தொடங்குகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த பிரசாரத்தை தொடர்ந்தாவது பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் தலைவிரித்தாடும் உட்கட்சி பஞ்சாயத்து முடிவுக்கு வருமா? என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன. ஓமிக்ரான் பரவல் இருப்பதால் இந்த தேர்தல்கள் நடைபெறுமா? என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

காங். உட்கட்சி மோதல்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் பஞ்சாப் மாநில காங்கிரஸில் இடைவிடாத உட்கட்சி மோதல்கள் தொடருகின்றன. ஏற்கனவே உட்கட்சி மோதலால்தான் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸைவிட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கை கோர்த்தும்விட்டார்.

கருத்து கணிப்புகள்
ஆனாலும் தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங்குக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையேயான அக்கப்போர் தொடரவே செய்கிறது. பஞ்சாப் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளும் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுக்கும்; தொங்கு சட்டசபைக்கே அதிக வாய்ப்பு என கூறி வருகின்றன. காங்கிரஸைவிட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ராகுல் பிரசாரம்?
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தை ஜனவரி 3-ந் தேதி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் இருந்து ராகுல் காந்தியின் பிரசாரம் தொடங்கப்பட இருக்கிறதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரசாரத்துக்கு வருவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

பஞ்சாயத்துகள் ஓயுமா?
ராகுல் காந்தியின் வருகைக்குப் பின்னராவது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஈகோவை விட்டு உட்கட்சி பஞ்சாயத்தை முடித்து கொள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடம் நிலவுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைத் தக்க வைத்திருக்க முடியும். ஆனால் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி துருவங்களாக செயல்பட்டு வருவதால் வம்படியாகவே ஆட்சியை பறிகொடுக்கிறது காங்கிரஸ் எனவும் குமுறுகின்றனர் அக்கட்சியின் சீனியர்கள்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications