டர்பன் அணிந்தா நீங்க சர்தாரா..? - பிரதமர் மற்றும் கெஜ்ரிவாலை சாடும் பிரியங்கா காந்தி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் டர்பன் அணிந்து இருப்பார்கள். தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.
டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் நடத்தியப் போராட்டம், இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பஞ்சாப் தேர்தல் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

காங்கிரஸ்
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் மீண்டும் வெற்றி பெற்றி ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதையை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியே, காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பிரியங்கா காந்தி
பஞ்சாப், உத்தரப்பிரதேஷ், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தலின் காங்கிரஸ் முகமாகவே பிரியங்கா காந்தி அறியப்படுகிறார். உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக சோபிக்காத காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.

பஞ்சாப் பிரசாரம்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது, ''உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம் பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவாலிடம் சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும் தைரியத்தையும் சொல்லுங்கள். பஞ்சாப் பஞ்சாபியர்களுக்கு சொந்தமானது என்று அவர்களிடம் சொல்லுங்கள். நான் அவர்களை சர்தார் ஆக்குவதில்லை. அவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.லிருந்து பிறந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்
கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார், மோடி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். அவர்கள் இருவருமே ஏழைகள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள். லக்கிம்பூர் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சரின் மகன் விடுதலை ஆகியுள்ளார். இதை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பாஜக விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் வழக்கை வலுவாக மாற்றியிருக்க வேண்டும்'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications