பஞ்சாப்பை "பஞ்சர்" ஆக்கிய ஆம் ஆத்மி.. ஆட்சி அமைக்கும் கெஜ்ரிவால் கட்சி.. உறைந்து போன பாஜக, காங்கிரஸ்
பஞ்சாப் தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
பஞ்சாப்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இன்று ஆரம்பத்திலேயே அசத்திவிட்டது ஆம் ஆத்மி. அக்கட்சி அபார வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது... இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி அந்தக் கட்சி 89 இடங்களில் முன்னிலையில் உள்ளது... ஆளும் காங்கிரஸ் கட்சி பரிதாபமாக வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சிரோமணி அகாலி தளம் 9 இடத்திலும் பாஜக கூட்டணி 5 இடத்திலும் முன்னணியில் உள்ளன.
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 2.2 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, மற்றவர்கள் 15, அதிலும் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.
ஆனால் 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலின்போது பாஜகவின் செல்வாக்கு ஒரேயடியாக எகிறியது.. ஆனால், பாஜகவைவிட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசின் செல்வாக்குதான் அதிகம் உள்ளது...

சித்து
எனவே ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி அப்போது ஏற்பட்டது.. இதற்கு பிறகுதான் சித்து என்ட்ரி தந்தார்.. சித்து வந்தபிறகுதான் காங்கிரஸ் பரபரப்பானது.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.. சித்துவின் ஒவ்வொரு சிக்ஸர்களையும் பார்த்து பாஜக மிரண்டுதான் போனது.. அதற்கு பிறகுதான் வேறு வழியில்லாமல் இந்த முறை, ஒரு நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு குறைபாடு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது பாஜக.. கடைசியில் அதுவும் எடுபடவில்லை...

தலித் முதல்வர்
மற்றொருபுறம் காங்கிரசும் சோபிக்கவில்லை.. விவசாயிகள் பிரச்சனை தலைதூக்கிய போதும், அதை தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்தி கொள்ள காங்கிரஸ் தவறவிட்டது என்றே சொல்லலாம்.. இத்தனைக்கும், அந்த கட்சி தலித் இனத்தவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது.. ஆனாலும், மக்களை பெரிதாக கவரவில்லை போலும்.. தேர்தலுக்கு முந்தைய, மற்றும் பிந்தைய ரிசல்ட்களிலேயே இதை உணர முடிகிறது.

ஆம் ஆத்மி
அதனால்தான், புத்தம் புது பொலிவாக, போட்டியிட வந்த ஆம் ஆத்மி பஞ்சாப்பை ஈர்த்துவிட்டது.. அவர்களின் தேர்தல் அறிக்கையும், பாஜகவை தாக்கி பேசும் விதமும், களப்பணி சுறுசுறுப்பும் மக்களை திரும்ப பார்க்க வைத்தது.. குறிப்பாக பெண்களின் ஆதரவை ஆம் ஆத்மி பெற்றுள்ளதாக தெரிகிறது.. கெஜ்ரிவாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் இதுவரை வந்துள்ளன.. அதாவது 6 கருத்து கணிப்புகளில் இது உறுதியாகி உள்ளது என்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பாஜக
இப்போது விஷயம் என்னவென்றால், இன்றைய ரிசல்ட் எப்படியும் ஆம் ஆத்மிக்கே சாதகமாக இருக்கும் பட்சத்தில், பாஜக தன் பங்குக்கு ஏதாவது செய்யும் என்றே வைத்து கொள்வோம்.. ஆனால், காங்கிரஸ் சரிவை கண்டுள்ளது அம்மாநில தொண்டர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருக்க போகிறது.. காங்கிரசின் வீழ்ச்சி ஆம் ஆத்மிக்கு லாபமாக மாறி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.. காரணம், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 40 சீட்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் அறுதியிட்டு சொல்லின..

பாஜக அதிர்ச்சி
ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்ற பிளானில் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 தினங்களாகவே ஈடுபட்டு வந்தாலும், இந்த விவகாரத்தில் பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் சித்து ஏன் அமைதியாக ஒதுங்கியிருக்கிறார் என்ற சந்தேகமும் எழுகிறது. ஏற்கனவே, பஞ்சாப்பில் உட்கட்சிப்பூசல் காரணமாகத்தான் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது.. இப்போது அது மேலும் அதிகமாகும் என்கிறார்கள்..

கெஜ்ரிவால்
இதில் ஆம் ஆத்மியின் எழுச்சி பாஜகவுக்கே சற்று ஷாக்தான்.. டெல்லியை தாண்டி, பஞ்சாப்பில் இந்த முறை போட்டியிட அதிக கவனம் எடுத்து கொண்டார் கெஜ்ரிவால்.. மிக குறுகிய காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது சக்தியாக உருவெடுக்கிறது என்றால், அதற்கு காரணம் கெஜ்ரிவாலின் சமயோஜிதபுத்தி மட்டுமல்ல, பாஜக மீதான அதிருப்திகளும்தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளன..
Recommended Video

காங்கிரஸ்
கடந்த எம்பி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும் கூட, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிக்க முடிந்ததே இதற்கு சரியான உதாரணம்... எங்கெல்லாம் தேசிய கட்சிகள் ஆட்சி நடக்கிறதோ, கர்நாடகா உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆக்டிவாக உள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.. அத்துடன் காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி விஸ்வரூபமெடுத்து வருகிறது. 89 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை தாண்டிவிட்ட நிலையில், பஞ்சாப்பில் ஆட்சியமைக்கிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி..!

ஆம் ஆத்மி கட்சி
மாபெரும் வெற்றி. தேசிய அளவில் புதிய சக்தியாக நாங்கள் உருவெடுத்துள்ளோம் என்று ஆம் ஆத்மி கட்சி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.. ஆனால், எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சியான காங்கிரஸோ மண்ணை கவ்வி உள்ளது.. பாஜகவோ இருக்கிற இடம் தெரியாமல் சுருண்டு போயுள்ளது.. அகாலிதளம் 9 இடங்களில் திணறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி உருவெடுக்க போவதாக பல வருட காலமாகவே சொல்லி வந்த நிலையில் இன்று அது ஊர்ஜிதமாகி உள்ளது.. ஆம் ஆத்மியின் இந்த எழுச்சியால், பாஜகவும், காங்கிரசும் அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகின்றன.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications