இந்தியாவில் கொரோனா தாண்டவம்.. ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.. உலகளவில் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நான்கு நாட்களாக உலகிலேயே இந்தியாவில்தான் அதிக பேர் கொரோனா காரணமாக தினமும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,679,958 பேர் குணமாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 477 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 12,587,920 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 165,132 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.முக்கியமாக மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்களில் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது

மகாராஷ்ரா

மகாராஷ்ரா

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 50074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 30,10,597 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 25,22,823 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 55878 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளா

கேரளா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,35,234 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,02,359 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4669 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 10,15,155 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,63,419 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12625 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,99,807 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,65,071 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12778 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 9,07,676 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,90,137 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7239 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+