பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. மாற்றுப் பாதையில் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள்- மதுரை, திண்டுக்கல் வராதாம்!
சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட 10 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த 10 ரயில்கள் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படாது எனவும் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1. செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848): செங்கோட்டையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை (கொடைரோடு), திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது. இதற்கு மாற்றாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும். வரும் 24, 25, 27,28,30 ஆகிய நாட்களில் இந்த மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக வரும் 30-ந் தேதியன்று மயிலாடுதுறையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை (கொடைரோடு), திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது. திருச்சி,புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை சென்றடையும்.
2. நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில்: வரும் 25,28 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் திருமங்கலம், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர், ஈரோடு வழியாக செல்லும்; கோவையில் இருந்து மறுமார்க்கமாக வரும் 25,28 தேதிகளில் இதே வழித்தடத்திலேயே நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.
3. நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ்கள் (16340,16352) ரயில் வரும் 28-ந் தேதி, 30-ந் தேதி விருதுநகர்- திருச்சி பாதையில் இயக்கப்பட்டு மும்பை செல்லும். மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது.
4.குருவாயூர் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) வரும் 24,27,29 ஆகிய தேதிகளில் விருதுநகர்- திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும். மதுரை- திண்டுக்கல் மார்க்கத்தில் இயக்கப்படாது.
5. கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (12666) வரும் 25-ந் தேதி மதுரை- திண்டுக்கல் வழியாக இயக்கப்படாமல் விருதுநகர்- திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும்.
6. நாகர்கோவில்- காச்சிகுடா (16354) எக்ஸ்பிரஸ் ரயிலும் வரும் 25-ந் தேதி விருதுநகர்- திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும். மதுரை- திண்டுக்கல் வழியாக இயக்கப்படாது.
7. காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயில் (06368)- உ.பி. பனாரஸில் இருந்து கன்னியாகுமரி வரும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 26-ந் தேதி திருச்சி- விருதுநகர் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்; மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.
8. சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 25,26 ஆகிய தேதிகளில் திருச்சி வரை இயக்கப்படும்; 25,28 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும். திருச்சி- மதுரை இடையே இந்த நாட்களில் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படும்.
9.. வரும் 24,27 தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல 25,28 தேதிகளில் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும்.
10. குஜராத்தின் ஓஹாவில் இருந்து மதுரை வரும் சிறப்பு ரயில், விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் சேவை விழுப்புரம்- மதுரை இடையே ரத்தாகிறது. மதுரையில் இருந்து 31-ந் தேதி புறப்பட வேண்டிய ஓஹா எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications