குலுக்கலில் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை பாருங்க.. ₹500 சீட்டில் ரூ.16 லட்சம் வீடு! தெலுங்கானா அதிசயம்
சென்னை: அதிர்ஷ்டம் என்பது அனைவருக்குமே அமைந்துவிடுவதில்லை. சிலர் சிறிது முயற்சித்தாலே பெரிய பலனை அடைந்துவிடுவார்கள்.. சிலர் எவ்வளவு முயன்றாலும் விஷயம் சரியாக நடக்காது. அது இஷ்டத்துக்கு வந்து போவதால்தான் அதிர்ஷ்டம் என்றே பெயர் வந்ததாக சொல்வார்கள்.. இதோ தெலுங்கானாவில் ஒரு அதிர்ஷ்ட சம்பவம் நடந்துள்ளது.. இதுதான் இணையத்தில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.
லாட்டரி சீட்டுகளை பொறுத்தவரை, நம்முடைய தமிழ்நாடு உட்பட குஜராத், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தடை உள்ளது..
ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு கடந்த 2003ல் தடையை விதித்தது. சுரண்டல் லாட்டரியால் அதாவது ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏராளமான குடும்பங்கள் பணத்தை இழந்தன.. இதனால் இந்த குடும்பங்களை காப்பதற்காகவே தமிழக அரசு அப்படியொரு நடவடிக்கையை எடுத்தது.

குலுக்கல் முறை பரிசு
அதேசமயம் குலுக்கல் முறை பரிசு வழங்கப்படும் நடைமுறையானது, அனைத்து மாநிலங்களிலுமே உள்ளது.. குலுக்கல் முறையில் பரிசு என்பது அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டது.. பொதுவாக ஒரு விழா அல்லது வணிக விளம்பர நிகழ்ச்சி அல்லது சமூக நல நிதி திரட்டும் முயற்சிகளின் போது இதுபோன்ற குலுக்கல் முறை பரிசுகள் அறிவிக்கப்படும்.. இந்த முறை முழுக்க அதிர்ஷ்டத்தை சார்ந்தது என்பதால், யாருக்கும் முன்கூட்டியே வெற்றி உறுதி செய்ய முடியாது..
குலுக்கலில் பரிசாக பணம் மட்டுமே விழக்கூடும் என்று நிச்சயமில்லை.. மின்சாதனங்கள், வாகனம் அல்லது தங்க நாணயம் போன்றவை வழங்கப்படும். சில சமயங்களில் குலுக்கல் முறைகள் வணிக நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பயன்படுகின்றன. இதுபோன்று குலுக்கல் முறையில் பரிசு வழங்குவது மக்களுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தந்து வருகிறது.
ரூ.16 லட்சம் வீடு
இப்படிப்பட்ட சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது.. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சங்கர் பேட்டையில் ராம பிரம்மம் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் வசித்து வரும் வீடு, கிட்டத்தட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.இது மிகவும் பழைய வீடு என்பதால், இந்த வீட்டையும், சொந்த நிலத்தையும் விற்க முடிவு செய்தார். இதற்காக தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தார்.ஆனால், இவரது வீட்டை வாங்க யாருமே முன் வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய ராம பிரம்மம், திடீரென ஒரு புது யுக்தியை அறிவித்தார்..
நிலம் - ரூ.500 பரிசு சீட்டு
அதன்படி, தன்னுடைய வீட்டையும், நிலத்தையும் வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் ஒன்றை வைத்துவிட்டார்..இந்த பேனரை பார்த்ததுமே ஏராளமானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு, ரூ.500 பரிசு சீட்டு வாங்கி சென்றனர். அந்தவகையில் சங்கர் என்பவரும் 500 ரூபாய் தந்து சீட்டு வாங்கி கொண்டு போனார்.. இவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்...தன்னுடைய பெயரிலும், மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா, மற்றும் தன்னுடைய 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் என மொத்தம் 4 சீட்டுக்களை வாங்கினார்.
அதிர்ஷ்டசாலி ஹன்சிகா குழந்தை
நேற்றைய தினம் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. இதில், குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.. ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீட்டை 10 மாத குழந்தை ஹன்சிகா வென்றிருக்கிறாள்.. இதனால் குழந்தை ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அதிர்ஷ்டசாலியான 10 மாத குழந்தை ஹன்சிகாவை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications