10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது.. 9,76,089 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது.. மாணவர்கள் முதல்நாள் மொழித்தேர்வினை எழுதி வருகிறார்கள்.. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் சந்திக்கிறார்கள்.. இன்று தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை 10ம் வகுப்பு தேர்வு நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி பொதுதேர்வுகள் நடைபெற்று வருகின்றன.. இதில், முதற்கட்டமாக மேல்நிலை வகுப்புகளுக்கான 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் சமீபத்தில்தான் நடந்து முடிவடைந்துள்ளன.

இதன் அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.. தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இதில், இன்றைய தினம் முதல் தேர்வாக மொழி தேர்வு நடந்து வருகிறது.. ஏற்கனவே, 12ம் வகுப்பு மொழித்தேர்வின் போது 50,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தராமல் இருந்தது மிகப்பெரிய சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில், 10ம் வகுப்பு தேர்வு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதுவும் குறிப்பாக 10ம் வகுப்பு செய்முறை தேர்விற்கே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்தனர்..
இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு துவங்குகிறது.. இன்று முதல், 20ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இறுதி தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படும்.. இந்த முறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9,76,089 மாணவர்கள் எழுத தயாராக உள்ளனர்.. இதில் 5,01,028 மாணவர்கள், 4,75,056 மாணவிகள் தேர்வு எழுத போகிறார்கள்.. இதில் மாற்று திறனாளி மாணவர்கள் மற்றும் சிறைவாசிகளும் அடக்கம்.. அந்த வகையில் மாற்று திறனாளி மாணவர்கள் 13,151 பேரும், சிறையில் இருந்து தேர்வு எழுதுபவர்கள் 264 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4025 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது. பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்டமின்சாதனங்களை கொண்டு வரதடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எந்த காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாகொண்டு எழுதக்கூடாது. விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயரை குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றாலோ அல்லது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications