தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவும், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழைய பதவியும் புதிய பொறுப்பும் வருமாறு.

1. சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) துணை ஆணையர் எம்.குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை சைபர் பிரிவு-2 எஸ்.பி, சிபிச் சக்ரவர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சிபிசிஐடி எஸ்.பி, பா.மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாகப்பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. அமலாக்கப்பிரிவு குற்றப்புலனாய்வு குழு எஸ்.பி, சுப்புலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையர் அசோக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி, பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-வது பட்டாலியன் கமான்டன்ட் உமையாள் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி காவல் ஆணையரக நிர்வாகம் மற்றும் தலைமையிட பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி, மகேஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் தீபா கணிகர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8-வது பட்டாலியன் (புதுடில்லி) கமான்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8-வது பட்டாலியன் (புதுடில்லி) கமான்டன்ட் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவைபுதூர் 4-வது பட்டாலியன் கமான்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. சென்னை காவல் ஆணையரக நிர்வாக பிரிவு துணை ஆணையர் மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையர் பிரதீப் இடமாற்றம் செய்யப்பட்டு சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையர் அருண் பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சைபர் கிரைம் பிரிவு-2 எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்ரமணியன் சென்னை இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
16. வேலூர் சப் டிவிஷன் ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் எஸ்.பி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications