23 தீர்மானத்திலும் "அந்த விஷயம்" நோ! சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் பதவியை காலி செய்ய பிளான்?
சென்னை : அதிமுக பொதுக்குழு நாளை சென்னை வானகரத்தில் கூடவுள்ள நிலையில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது..
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு நொடிக்கு நொடி பரபரப்பு, எதிர்பாராத திருப்பங்கள் அதிரடி பேட்டிகள், அறிக்கைகள் என வழக்கம் போலவே அதிமுக உட்கட்சி விவகாரம் பெரிதாக வெடித்து இருக்கிறது.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த அதிமுக தொண்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின்போது ஒற்றை தலைமை முழக்கத்தை எழுப்பினார்.

தலைமைக்காக போட்டி
அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு என சரிசமமாக மோதல் இருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் காற்று எடப்பாடி பக்கம் வீசத் தொடங்கியது. எப்படியாவது கட்சியின் தலைமையை கைப்பற்றி விடவேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கனவு நிறைவேறி விட்டது என்றே கூறலாம். கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஆதரவைப் பெற்றுள்ள எடப்பாடி கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க நாளை தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

பொதுக்குழு தீர்மானங்கள்
இந்த நிலையில்தான் நாளை அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் கட்சியின் வரவு செலவு குறித்த கணக்கு விபரங்கள் மற்றும் இறுதி செய்யப்பட்ட தீர்மானங்களை வழங்கினர். அவரிடம் வழங்கப்பட்ட தீர்மானம் குறித்த விவரங்கள் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

இரட்டை தலைமை ஒழிப்பு?
கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர், முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இயற்றப்படும் வழக்கமான தீர்மானங்களோடு, ஒரு சில முக்கிய முடிவுகள் இந்த தீர்மான பட்டியலில் அடங்கி இருக்கிறது. குறிப்பாக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி மீண்டும் இணைந்தபோது உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நீக்கிவிட்டு மீண்டும் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியைக் கொண்டு வருவதற்கான தீர்மானம் அதிலும் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதால், அது நீக்கப்பட்டிருக்கிறது.

பின்னணி என்ன?
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்ற முக்கிய தலைவர்களில் யாராவது ஒருவர் மூலம் இரட்டை தலைமை முறையை ஒழிக்க வேண்டும், ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர வேண்டும் என சிறப்பு தீர்மானத்தை முன்மொழிய வைக்க திட்டமிட்டு இருக்கிறது. அவ்வாறு பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்படும் போது நிச்சயம் அது வெற்றிபெறும். காரணம் 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கடிதம் வழங்கியுள்ளனர். இதை மனதில் வைத்தே இரட்டை தலைமை, ஒழிப்பு, ஒற்றை தலைமையைக் கொண்டு வருவது உள்ளிட்ட தீர்மானங்கள் 23 தீர்மானங்கள் அடங்கிய பட்டியலில் இல்லை.

திமுகவுக்கு பதிலடி
மேலும் கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் குழு , அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பதவிகளை நீக்கிவிட்டு மேல்மட்ட அளவிலான அதிகாரம் பொருந்திய ஒரு குழுவை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திமுக ஆட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக போடப்படும் வழக்குகள் பொய்யானது என்றும் அந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் திமுகவுக்கு எதிராக நிறைவேற்றப்பட இருக்கிறது மேலும் திமுக வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராட்டக் குழு என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தவும் இந்த தீர்மானத்தில் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒற்றை தலைமை தீர்மானம்
மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ஒற்றை தலைமை தீர்மானம் குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. ஆனால் 23 தீர்மானங்கள் அடங்கிய பட்டியலில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் இல்லை. எனவே ஓபிஎஸ்சும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் கூட்டம் ஆரம்பித்த பிறகு, சிறப்பு தீர்மானமாக இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஓபிஎஸ் ஒன்றும் செய்ய முடியாது. அதிக மா.செக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதால் இரட்டை தலைமை ஷரத்தை நீக்குவது பெரிய விஷயமாக இருக்காது. அதிமுக கட்சி விதிகளை பொருத்தவரை தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன் காரணமாக பொதுச் செயலாளர் என்ற பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டு பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

உட்கட்சி தேர்தல்
எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து வேறு யாரும் போட்டியிடாவிட்டால் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆட்சிக் காலம் தொடங்கி கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக அவர் இருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்ததில்லை. ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்குமா என்பதே எதிர்பார்ப்பு.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications