சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாள் லீவு விட்டாங்க! பாட்டில்களை வாங்கி குவித்த குடிகாரர்கள்! டாஸ்மாக்குக்கு இவ்வளவு வருமானமா?

Google Oneindia Tamil News

சென்னை : நேற்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதால், நேற்று முன் தினம் மட்டும் சுமார் 274 நாட்களுக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

1% பேரால் மட்டுமே முடியும்.. இந்த போட்டோவில் ஒளிந்து இருக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க.. சவால்!1% பேரால் மட்டுமே முடியும்.. இந்த போட்டோவில் ஒளிந்து இருக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க.. சவால்!

டாஸ்மாக் மதுக்கடைகள்

டாஸ்மாக் மதுக்கடைகள்

மேலும் காந்தி ஜெயந்தி சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் நேற்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதால், நேற்று முன் தினம் மட்டும் சுமார் 274 நாட்களுக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அதிகாலை தேவைக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மது வகைகளை வாங்கிக் குவித்தனர் தமிழக குடிகாரர்கள். இதனால் தமிழகம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் அன்று மாலை மது விற்பனை களைகட்டியது. பெட்டி பெட்டியாகவும், சாக்கு பைகளிலும் வாங்கிச் சென்றனர்.

274 கோடி ரூபாய்

274 கோடி ரூபாய்

அன்று மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் சுமார் 274 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் உள்ள மது கடைகளில் மட்டும் சுமார் 58 கோடியே 26 லட்சம் ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த புது வருடப்பிறப்புக்கு விற்பனையானதை விட அதிமாகும்.

மதுரை முதலிடம்

மதுரை முதலிடம்

மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சென்னை மண்டலத்தில் 56 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மூன்றாவதாக சேலத்தில் 54 கோடி ரூபாய்க்கும், கடைசி இடமாக 4வது இடத்தில். கோவை மண்டலத்தில் 52 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன என டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Since yesterday was Independence Day, the Tamil Nadu Government gave a holiday to the tasmac bars and pubs, so the sale of liquor was closed for about 274 days the day before yesterday alone. ; நேற்று சுதந்திர தினம் என்பதால்டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் மட்டும் சுமார் 274 நாட்களுக்கு மதுவிற்பனை
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X