தடுப்பூசி போடவில்லையா? -தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம்!
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் 2 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மெகா தடுப்பூசி முகாமில், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதைக் கடந்தவர்கள் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமில், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36-வது மெகா தடுப்பூசி முகாம்
மத்திய அரசு, பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறித்திருந்த நிலையில், இதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை சார்பில், இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 50 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிகள்
இந்த முகாமில், 18 வயது முதல் 59 வயதுடையவர்கள், பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக பொதுமக்கள் செலுத்திக் கொள்ளாலம். வரும் 30-ம் தேதிக்குள் காலக்கெடு முடிவடைவதால், 30-ம் தேதிக்குப் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட முடியாது. ரூ.386 ரூபாய் கட்டணத்தில்தான் போட வேண்டியிருக்கும். எனவே, இன்று நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி போடாதவர்கள்
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு, 2 தவணை தடுப்பூசி செலுத்தாவர்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகேயுள்ள தடுப்பூசி முகாமுக்குச் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications