சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 4150 பேர் பாதிப்பு.. சென்னையில் பாசிட்டிவான மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால் மதுரை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 4 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் இன்றும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2186 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் - வாந்தி, டயாரியா இருக்கா உடனே டெஸ்ட் பண்ணுங்ககொரோனா வைரஸ் அறிகுறிகள் - வாந்தி, டயாரியா இருக்கா உடனே டெஸ்ட் பண்ணுங்க

எவ்வளவு சிகிச்சை

எவ்வளவு சிகிச்சை

இதன் மூலம் இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 62,778 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

எத்தனை பரிசோதனை

எத்தனை பரிசோதனை

தமிழகத்தில் இன்று 34102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 12,83,419 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,41,715 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 34831 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

பாசிட்டிவ் மாற்றம்

பாசிட்டிவ் மாற்றம்

சென்னையில் இன்று ஒரே நாளில் 1713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடுமையாக உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக நல்ல பாசிட்டிவ்வான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வேலூரில் கிடுகிடு

வேலூரில் கிடுகிடு

வேலூரில் இன்று ஒரே நாளில் 179 பேர், விழுப்புரத்தில் 109 பேர், விருதுநகரில் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டில் 274 பேர், மதுரையில் 308 பேர், திருவள்ளூரில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் 86 பேர், திருவண்ணாமலையில் 141 பேர், ராணிப்பேட்டையில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விதிமுறைகள் தளர்வு

விதிமுறைகள் தளர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,11,151 பேரில் 68085 பேர் ஆண்கள், 43044 பேர் பெண்கள், 22 பேர் திருநங்கைகள் ஆவர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4150 பேரில் 2481 பேர் ஆண்கள், 1669 பேர் பெண்கள் ஆவர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து வரும் சூழலில் நாளை முதல் லாக்டவுன் விதிமுறைகளில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் கட்டாயம் வெளியில் செல்லும் போது மாக்ஸ் அணியுங்கள். அதேபோல் நீங்கள் செல்லும் கடைகளில் யாரேனும் மாஸ்க் அணியாமல் இருந்தால் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வருவோரையும் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்துங்கள். அனைவரும் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்துவதே கொரோனாவை கட்டுப்படுத்த நம் முன் உள்ள வாய்ப்பு.

English summary
4150 covid 19 positive cases on july 5 , possitive changes in chennai , covid cases now controlled in chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X