சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் புது உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்புக்கான 5 வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் பலகோடி பேர் மீண்டுள்ளனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நான்காவது அலை வீசக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி.. 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி! குளிக்க சென்ற போது விபரீதம்கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி.. 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி! குளிக்க சென்ற போது விபரீதம்

தமிழகத்திலும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்களில் நடமாடுபவர்கள் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம்

ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத் துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த சில நாள்களாக கேரளா, மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பிஏ4 மற்றும் பிஏ5 வகை ஒமைக்ரான் புதிய கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன.

தடுப்பு நடவடிக்கைகள்

தடுப்பு நடவடிக்கைகள்

தமிழகத்திலும் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது எனவே அதனை ஆரம்ப நிலையில் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

5 வழிமுறைகள் அவசியம்

5 வழிமுறைகள் அவசியம்


கொரோனா பரவலை தடுக்க நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல், பரிசோதனை நடவடிக்கைகள், தொடர்பில் இருந்தோரை கண்டறிதல், சிகிச்சை நடைமுறைகள், தடுப்பூசி செலுத்துதல் என ஐந்து வகையான வழிமுறைகளை கையாளுவதை மாவட்ட நிர்வாகங்கள் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாதோரைக் கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
covid 19 increase tamil nadu Dr.J.Radhakrishnan letter to District collector: (கொரோனா அதிகரிப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்) As the incidence of corona in Tamil Nadu is on the rise again, Health secretary Dr.Radhakrishnan has advised district collectors to follow 5 steps to prevent the disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X