கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது பாய போகும் புதிய சட்டம்.. ஆக்சனில் இறங்கிய அறநிலையத்துறை!
சென்னை : கோயில் நிலங்கள், கட்டிடங்களை ஆக்கிரமித்தால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் வகையில் அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்திலுள்ள சேர, சோழ, பாண்டிய, பல்லவ உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் உள்ளன.
இந்த கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 4,78,283 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது

வாடகை
இந்த நிலங்களில் பெரும்பாலானவை குத்தகை, வாடகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். ஒரு சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு
இந்நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கோயில் செயல் அலுவலர்கள், ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கோயில் நிலத்தை சட்ட விரோதமாக நிலக்கிரயம் செய்யப்பட்டிருக்கும் இனங்கள், மூன்றாம் நபர் அனுபவத்தில் உள்ள இனங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

கோயில் அலுவலர்கள்
அறநிலையத்துறைக்கு இக்குழுக்கள் சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

சட்ட நடவடிக்கை
எனினும் சிலர் வீட்டை காலி செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்கள் அந்த மாதிரியான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

புதிய திருத்தம்
இதனிடையே அறநிலையத்துறை உயர்அதிகாரிகள் சட்ட வல்லுனர்களிடம் இதை திருத்துவது குறித்து கருத்து கேட்டுள்ளனர்.அவர்கள் அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும். இந்த சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோயில் செயல் அலுவலர்/தக்கார்/ ஆய்வர் ஆகியோருக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட உள்ளது.

ஆக்கிரமிப்புக்கு செக்
இவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு புகார் அளிக்கலாம். இந்த புகார் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறின.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications