தீபாவளி லீவு முடியப் போகுது! சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர 6,852 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர தமிழகம் முழுவதும் 6,852 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இன்று, நாளை, நாளை மறுதினம் என 3 நாட்களுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் பேருந்துகள்
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றிரவு முதல் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு மக்கள் திரும்பிச் செல்லத் தொடங்குவார்கள். அவ்வாறு அவர்கள் ஊர் திரும்பும் போது கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக 6,852 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத் துறை. 24ஆம் தேதியான இன்றிரவு முதல் 26ஆம் தேதியான நாளை மறுதினம் இரவு வரை இந்தப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி அன்று
தீபாவளி நாளான இன்றே பெரும்பாலானோர் ஊர் திரும்பு வாய்ப்பு குறைவு என்பதால் இன்றிரவு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள். அதேவேளையில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நாளையும், நாளை மறுநாளும் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த 2 நாட்களுக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

5 லட்சம் பேர்
கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தீபாவளியை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாட சென்றிருக்கின்றனர். இதனால் எல்லா முக்கிய ஊர்களுக்குமே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

போக்குவரத்துத் துறை
சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் இன்றிரவு திருச்சியில் ஆய்வு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்துகள் மட்டுமின்றி கார்களில் சென்றவர்களும் நாளை சென்னைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருச்சி -சென்னை சாலை போக்குவரத்து நெரிசலால் திணறும் எனத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications