சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 அறிவிப்புதான்.. ஆட்டமே மாறப்போகிறது.. கேம் சேஞ்சரை களமிறக்கிய இபிஎஸ்.. ஜெர்க் ஆகும் திமுக கேம்ப்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டு இருக்கும் முக்கியமான 7 திட்டங்கள் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை இந்த நான்கு அறிவிப்புகள் மாற்றலாம் என்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகளை புரட்டி போடும் அளவிற்கு பல அதிரடி அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் இனி அதிமுக உற்சாகமாக பிரச்சாரம் செய்யும் அளவிற்கு கவர்ச்சிகரமான பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அம்மா.. அம்மா.. அம்மா.. ஒரே சொல்தான்.. வாக்குகளை அள்ளிய எடப்பாடி.. தேர்தல் அறிக்கையில் அதிமுக மேஜிக்அம்மா.. அம்மா.. அம்மா.. ஒரே சொல்தான்.. வாக்குகளை அள்ளிய எடப்பாடி.. தேர்தல் அறிக்கையில் அதிமுக மேஜிக்

பெண்கள்

பெண்கள்

அதிமுக அறிக்கையில் முதல் முக்கியமான இரண்டு விஷயங்கள் அனைவருக்கும் சூரிய சக்தி அடுப்பு வழங்கப்படும் மற்றும் அம்மா வாஷிங்மெசின் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் ஆகும். இரண்டும் பெண்கள் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெறும். முக்கியமாக கேஸ் விலை உயரும் போது சூரிய மின் அடுப்பு திட்டங்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

அதுபோக வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக பெரிய அளவில் இளைஞர்களின் வாக்குகளை கவர உதவும். இளைஞர்கள் வேலையின்மையால் கஷ்டப்படும் போது இந்த அறிவிப்பு இளைஞர்களை அதிமுக பக்கம் இழுக்கும்.

வீடு

வீடு

இதெல்லாம் போக அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிமுக கூறியுள்ளது. இந்த திட்டம் மூலம் கண்டிப்பாக சொந்த வீடு இல்லாத மக்கள் பயன்பெறுவார்கள். இவர்களின் வாக்குகள் கண்டிப்பாக அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது .

கேபிள்

கேபிள்

இலவச டிவி எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது போல இலவச கேபிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மாதா மாதம் 150-500 ரூபாய் வரை கேபிள், டிஷ் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

ஊதியம்

ஊதியம்

இது போக முதியவர்களின் வாக்குகளை கவரும் வகையில் முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது . வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது போல அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுகீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கண்டிப்பாக எம்பிசி பிரிவில் இருக்கும் பல்வேறு ஜாதியினர் இதனால் அதிமுகவின் பக்கம் தங்கள் கவனத்தை திரும்புவார்கள்.

 அனைத்தும் கவர்

அனைத்தும் கவர்

திமுக தரப்பை இந்த வாக்குறுதிகள் இப்போதே லேசாக ஆட்டம் காண வைத்துள்ளது. அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், சாதி வாக்குகள் என்று அனைத்தையும் குறி வைத்து சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மேற்கண்ட இந்த 7 வாக்குறுதிகள் தேர்தலில் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
7 Important announcements in the AIADMK manifesto will be the game-changer in the upcoming election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X