76 ஆவது சுதந்திர தினம்: கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை : நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
Recommended Video
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். காவல் துறை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார்.

முதல்வராக பதவியேற்று இரண்டாவது முறையாக அவர் தேசியக் கொடியை ஏற்றினார். இதையடுத்து, தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார்.
விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்தனர்.
சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகம், பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ரிப்பன் மாளிகை கட்டடம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள் என பெரும்பாலான இடங்கள் வண்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுடனான உறவு அமெரிக்காவை வலிமையாக மாற்றியுள்ளது - அமெரிக்க அதிபர் பைடன் சுதந்திர தின வாழ்த்து