என்னயா பண்ணி வச்சிருக்கீங்க.. நான் தான் உங்களுக்கு கிடைச்சனா? இணையத்தில் பரவும் ’அர்ஜென்டினா' ஆடு!
சென்னை : உலகெங்கும் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இன்று பல பரிட்சை நடத்த இருக்கும் நிலையில் இணையத்தில் ஆடு ஒன்றின் புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 22 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் கடந்த 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான்கு முறை உலக சாம்பியன் ஆக பல நாடுகளை துவம்சம் செய்த ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறி ரசிகர்களை பெறும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

உலக கோப்பை கால்பந்து
அடுத்தடுத்து பல ட்விஸ்ட்டிகளுக்கிடையே எதிர்பார்க்காத அதிர்ச்சி தோல்விகளும் வெற்றிகளும் அரங்கேறின. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வந்த நிலையில் பலத்த அடி வாங்கி அதிர்ச்சி அளித்தது. எதிர்பார்க்கப்பட்ட ரெனால்டோ வெளியில் உட்கார வைக்கப்பட்ட நிலையில் அவரது அணியும் நடையை கட்டியது .

பிரான்ஸ் - அர்ஜென்டினா
லீக் சுற்றுகள் தான் இப்படி என்றால் நாக் அவுட் ஆட்டங்களிலும் எதிர்பாராத பல அதிர்ச்சி காத்திருந்தது. பலத்த போட்டிகளுக்கிடையே தற்போது நடப்பு சாம்பியன் ஆன பிரான்ஸ் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இன்று பல பரிட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பை மகுடத்தை சூடப் போவது யார் என நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு லுசேல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ் அர்ஜென்டினா ஆகியவை களத்தில் இறங்குகின்றன.

மெஸ்ஸி
உலகக்கோப்பை இறுதிப் போட்டி தான் எனது இறுதி ஆட்டம் என மெஸ்ஸி அறிவித்ததில் இருந்தே இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் எகிறி இருக்கிறது. உலகெங்கிலும் இருக்கும் கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கும் இந்த போட்டி இன்று இரவு நடைபெற இருக்கிறது. மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் அசுர பலத்துடன் களமிறங்குகின்றன. கால்பந்து நாயகன் மெஸ்ஸி மேஜிக் நிகழ்த்துவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி எட்டு முப்பது மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் போட்டி தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

அர்ஜென்டினா ஆடு
அந்த வகையில் குறும்புக்கார அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் தனது வீட்டில் வளர்க்கும் வெள்ளாட்டுக்கு அர்ஜென்டினா சீருடையின் நிறமான லைட் ப்ளூ கலரை அடித்துள்ளார். தற்போது அந்த ஆடு தான் அர்ஜென்டினா ஆடு என்ற பெயரில் இணையத்தை கலக்கி வருகிறது. பலரும் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? என கமெண்ட் செய்து வருவதோடு இந்த ஆடு பிரியாணி ஆகுமா? எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications