ஆ.ராசாவுக்கு சப்போர்ட்டாக வந்த தபெதிக.. கொச்சைப்படுத்தினால் மனுதர்ம எரிப்பு போராட்டம்.. வார்னிங்!
சென்னை : மனு தர்மத்தை திரும்பப் பெறாமல் ஆ.ராசாவை தொடர்ந்து கொச்சைப்படுத்தினால் மனுதர்மம் எரிக்கப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் - சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆ.ராசா பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனுதர்மத்தை தடை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் புகார் அளித்து வருகிறது.
இந்நிலையில், ஆ.ராசவை தொடர்ந்து கொச்சைப்படுத்தினால், மனு தர்மம் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆ.ராசா பேச்சு
சமீபத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா, "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சமன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன். சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளை என்று பொருள். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்." என்று பேசி இருந்தார். ஆ.ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மன்னிப்பா
ஆ.ராசா, இந்துக்களை இழிவுபடுத்திவிட்டார் என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ஆ.ராசா, 'தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதன தத்துவத்துக்கு தான் எதிரி." எனப் பேசியிருந்தார்.

தபெதிக கோரிக்கை மனு
இந்நிலையில், புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்தில் மனு தர்மத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தபெதிகவினர் தெரிவித்துள்ளனர். இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதர்ம நூலை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் திராவிடக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

திரித்துக் கூறுகிறார்கள்
அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த தபெதிக மாவட்ட செயலாளர் குமரன், மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. காலம் காலமாக உழைக்கும் மக்களை பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து மனுதர்மம் இழிவு செய்கிறது. இதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஆ.ராசா, இந்து மதத்திலுள்ள மனுதர்மம் குறித்து பேசியதை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் திரித்துக் கூறி வருகின்றனர்.

மனு தர்மத்தை எரிப்போம்
ஆ.ராசா பேசியது பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லை. விபச்சாரியின் மகன் என்றெல்லாம் மனுதர்மத்தில்தான் எட்டாவது அத்தியாயத்தில் 415 வது சுலோகத்தில் உள்ளதைத்தான் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார், ஆ.ராசா பேசியதில் எந்தத் தவறும் இல்லை. மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும், புதுச்சேரியில் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த நூலை திரும்பப் பெறாவிட்டால், ஆ.ராசாவை கொச்சைப் படுத்தினால், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுதர்ம எரிப்பு போராட்டம் நடைபெறும்." எனத் தெரிவித்தார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications