திமுக இளைஞரணியை வேகப்படுத்த ஆ.ராசா.. ஸ்டாலின் ‘சக்கர வியூகம்’.. நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு!?
சென்னை : திமுகவில் உள்ள இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட 23 அணிகளையும் பலப்படுத்தும் பொறுப்பை திமுக துணைப் பொதுச் செயலாளர்களுக்கு பிரித்து வழங்கி இருக்கிறாராம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அந்தவகையில் ஆ.ராசாவுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் அணி, சிவிஎம்பி எழிலரசன் தலைமையிலான மாணவர் அணி உள்ளிட்ட ஐந்து அணிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடத்தப்பட்ட நிலையில், தேர்தலில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

ஸ்டாலின் ஆலோசனை
திமுகவில் உள்ள 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு, தணிக்கைக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். திமுகவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் சமீபத்தில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அணிகளின் மாநில நிர்வாகிகள் சுமார் 400 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வாக்காளர்களை கவர
நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக, பூத் வாரியாக கட்சியை பலப்படுத்துவது குறித்தும், இளம் வாக்காளர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்தும் அந்தந்த கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஸ்டாலின் போட்ட உத்தரவு
திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு அணிகள் செயல்பட்டு வந்த போதும் இளைஞரணி தவிர மற்ற அணிகள் அவ்வளவு ஆக்டிவ்வாக இருந்ததில்லை. மேலும், பல அணிகளுக்கு மாவட்ட அமைப்பில் கூட நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்படாத நிலைமைதான் இருந்தது. இந்த நிலையில் இப்போது கட்சியின் மொத்தமுள்ள 23 அணிகளுக்கும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலின் கொடுத்த உறுதி
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், பல அணிகள் களத்தில் செயல்படவில்லை என்பதே நிலவரமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு அணியிலும் அனைத்து மட்டங்களிலும் உரிய நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். நிர்வாகிகள் ஒப்புதலில் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அணியிலும் முழுமையாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் அவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். தேர்தல் பணிகளில் நமக்கு முக்கியத்துவம் இருக்காது என்று நினைக்க வேண்டாம். 234 தொகுதிகளிலும் இந்த அணிகளின் நிர்வாகிகளுக்கு தேர்தல் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.

ஆ.ராசாவுக்கு பொறுப்பு
ஒவ்வொரு அணியின் செயல்பாடும் கட்சியை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக 5 துணைப் பொதுச் செயலாளர்களுக்கு இந்த 23 அணிகளையும் வலுப்படுத்தும் பொறுப்பை பகிர்ந்து அளித்து இருக்கிறார் ஸ்டாலின். அதன்படி, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிற்சங்கங்கள், அமைப்புசாரா தொழிலாளர் அணி ஆகிய ஐந்து அணிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் அணியை கண்காணிக்கும் பொறுப்பு ஆ.ராசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கனிமொழிக்கு பொறுப்பு
அதேபோல, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு மகளிர் அணி- மகளிர் தொண்டர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, இலக்கிய அணி, மீனவர் அணி ஆகிய அணிகளை வலுப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, தொண்டர் அணி, விவசாய அணி, நெசவாளர் அணி ஆகிய அணிகளை மேம்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளர்கள்
துணைப் பொதுச் செயலாளர் பொன்முடிக்கு மருத்துவர் அணி, பொறியாளர் அணி, வெளிநாடு வாழ் தமிழர் அணி, சுற்றுச்சூழல் அணி, வர்த்தகர் அணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மற்றொரு துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜுக்கு ஆதிதிராவிடர் நலப்பிரிவு, சிறுபான்மையினர் உரிமை அணி உள்ளிட்ட அணிகளை பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து அணிகளிலும், மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமிக்கும் வேலைகள் தொடங்கி இருக்கும் சூழலில், அணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை துணைப் பொதுச் செயலாளர்களுக்கு வழங்கி இருக்கிறார் ஸ்டாலின்.

முறியடிக்க வேண்டும்
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள். தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும், அதிமுக, பாஜக கட்சியினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசாரம் அமைய வேண்டும். எனப் பேசியுள்ளார். மேலும், 23 அணி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதாமல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications