திரும்பும் வரலாறு.. அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: சென்னை, அண்ணாசாலையில் மீண்டும் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் ஒவ்வொரு தலைவருக்கும் மாநிலம் முழுவதும் சிலைகள் உள்ளன. உயிருடன் இல்லாத தலைவர்களுக்குத்தான் சிலை வைக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் 3 தலைவர்களுக்கு மட்டும்தான் உயிருடன் இருந்தபோதே சிலை வைக்கப்பட்டது. அவர்கள் காமராஜர், பெரியார் இன்னொருவர் கருணாநிதி.
கருணாநிதி ஆட்சி முறையால் கவரப்பட்ட பெரியார் நிகழ்ச்சியொன்றில் தம்பி கருணாநிதிக்கு சிலை ஒன்றை அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பெரியாருக்கு சிலை
அப்போது கருணாநிதி இடைமறித்தார். முதலில் உங்களுக்குச் சிலை அமைப்பதைப் பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப் பார்க்கலாம் என்று கூறினார். இதன்பிறகு சென்னை சிம்சன் அருகே தந்தை பெரியாருக்குச் சிலை அமைத்தார் கருணாநிதி. அப்போது, பெரியார் உயிருடன் இருந்ததால் உயிரோடு இருக்கும்போதே சிலை அமையப் பெற்ற பெருமை பெற்றார். பெரியாருக்கு சிலை வைத்ததும், கருணாநிதிக்குச் சிலை அமைக்கும் பணியை பெரியாரின் திராவிடர் கழகம் மேற்கொண்டது. அண்ணா சாலையில் தர்கா அருகே கருணாநிதி சிலை திராவிடர் கழகத்தால் நிறுவப்பட்டது. அப்போது கருணாநிதி இடைமறித்தார். முதலில் உங்களுக்குச் சிலை அமைப்பதைப் பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப் பார்க்கலாம் என்று கூறினார். இதன்பிறகு சென்னை சிம்சன் அருகே தந்தை பெரியாருக்குச் சிலை அமைத்தார் கருணாநிதி. அப்போது, பெரியார் உயிருடன் இருந்ததால் உயிரோடு இருக்கும்போதே சிலை அமையப் பெற்ற பெருமை பெற்றார். பெரியாருக்கு சிலை வைத்ததும், கருணாநிதிக்குச் சிலை அமைக்கும் பணியை பெரியாரின் திராவிடர் கழகம் மேற்கொண்டது. அண்ணா சாலையில் தர்கா அருகே கருணாநிதி சிலை திராவிடர் கழகத்தால் நிறுவப்பட்டது.

கருணாநிதி சிலை திறப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு, பெரியாரின் மனைவி மணியம்மை தலைமை தாங்கினார். குன்றக்குடி அடிகளார் இந்தச் சிலையை திறந்து வைத்தார். சிம்சன் அருகே பெரியார் சிலை, வாலாஜா சாலை சந்திப்பில் அண்ணா சிலை, அதற்கு சற்று அருகே, தர்கா சந்திப்பில் கருணாநிதி சிலை, ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் எம்.ஜி.ஆர் சிலை எனத் திராவிடக் கட்சிகளின் நான்கு முக்கிய தலைவர்களின் சிலைகள் அமைந்திருந்தன.

அதிமுக தொண்டர்கள் உடைத்தனர்
இந்த நிலையில்தான், 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, அதிமுக தொண்டர்கள் சிலர், அண்ணாசாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை கடப்பாரையைக் கொண்டு சேதப்படுத்தி சிலையை இடித்துத் தள்ளினார்கள். எனது நெஞ்சில்தானே அந்த தம்பி குத்தினார், வாழ்க, வாழ்க, என்று கருணாநிதி முரசொலியில் அப்போது எழுதியிருந்தார்.

வீரமணி சந்திப்பு
கருணாநிதி மறைந்த நிலையில், அண்ணாசாலையில் அதே இடத்தில்தான் மீண்டும் சிலை வைக்க கோரிக்கை விடுத்தார், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வீரமணி இதை வலியுறுத்தினார்.

ஸ்டாலின் அறிவிப்பு
இந்த நிலையில், தஞ்சை திமுக எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் இன்று சட்டசபையில் பேசும்போது, அதிமுகவினரால் அகற்றப்பட்ட கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது எழுந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா சாலையில், ஏற்கனவே பல தலைவர்கள் சிலைகள் உள்ளன. ஆனால் கருணாநிதி சிலை மட்டும் அகற்றப்பட்டது. அந்த அரசியலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. இது தொடர்பாக, ஏற்கனவே, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனவே, நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, மீண்டும் அண்ணா சாலையில், கருணாநிதி சிலை வைக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications