ஆவின் வெண்ணெய் விலை அதிரடி உயர்வு..இன்று முதல் அமல்..மக்கள் அதிர்ச்சி
சென்னை: ஆவின் நிறுவனத்தின் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் வெண்ணெய் முதல் உப்பு கலந்த வெண்ணெய் வரை அனைத்து வகை வெண்ணெய்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், பனீர், இனிப்பு உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆவின் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்ந்து வருகிறது. ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆவின் நிறுவனத்தில் 17 வகை இனிப்புகளின் விலை உயர்த்தப்பட்டது. ஆவின் குலோப் ஜாமுன் 125 கிராம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், ரசகுல்லா 100 கிராம் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், மைசூர் பாக்கு 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், சர்க்கரையில்லா பால்கோவா 1 கிலோ 520 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 80 ரூபாய் வரை உயத்தப்பட்டது.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 580.00ரூபாயில் இருந்து 630.00ரூபாயாக நேற்று முதல் உயர்த்தப்பட்டது. ஆவினில், 5 லிட்டர் நெய் பாட்டில் பாட்டில், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ. 630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
இனிப்புகள்,பால், நெய்யை அடுத்து தற்போது வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் வெண்ணெய் 255 ரூபாயில் இருந்து 265 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஆவின் பொருட்களின் அடுத்தடுத்த விலை உயர்வு அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications