செந்தில் பாலாஜியை பழிவாங்கல.. ஸ்டாலின் சபதத்தை தான் நிறைவேற்றியிருக்கிறோம்.. சீனுக்கு வந்த எச். ராஜா
சென்னை: இந்த ஆட்சியை எவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வருகிறமோ அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு நல்லது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. செந்தில் பாலாஜியை சிறையில் தள்ளுவோம் என ஸ்டாலின் தான் கூறினார். அதற்காக அவர் சந்தோஷப்பட வேண்டும் என எச் ராஜா கூறினார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சபாநாயகர் என்பவர் யார்? கட்சி சார்பு இல்லாதவர். அவர் ஒரு ஊழல் அமைச்சருக்காக பேசலமா? பாஜகவை சீண்ட வேண்டாம் என்று நான் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தலாகவே சொல்கிறேன். சீண்டினால் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டு இருப்பது அதிகம் ஆகும். எஸ்.ஜி சூர்யாவில் சொன்னது எந்த தவறும் இல்லை. எஸ்.ஜி சூர்யா கூறிய சம்பவம் நடைபெற்ற இடம் வேண்டும் என்றால் மாறியிருக்கலாம்.

ஆனால், சம்பவம் நடைபெற்றது உண்மை. சமூக நீதி திமுகவோடு சந்தி சிரிக்கிறது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசியிருக்குமா? திருமாவளவனை போல ஒரு தீய சக்தி இருக்க முடியாது. டிஜிபிக்கு சட்டப்படி ஒரு செயலை செய்யும் எண்ணம் இல்லை. எஜமான் என்ன உத்தரவு போடுகிறாரோ அதை நாம கேட்டுக்கொண்டு போவோம் என்ற மனநிலையில் ஒரு டிஜிபி எஸ்.ஜி சூர்யாவை கைது செய்து இருக்கிறார்.
இது அராஜகமான செயல். இது திமுகவின் அழிவின் ஆரம்பம் இந்த ஒருவாரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. செந்தில் பாலாஜி ஓபனிங் பேட்ஸ்மேன். முதல் நபர் ஜெயிலுக்கு போகிறவர். திமுகவில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்கு போவீர்கள். இந்த அரசாங்கம் எவ்வளவு காலம் ஓடும் என்று உறுதியளிக்க முடியாது. அவ்வளவு மோசமான சூழல் தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறது.
இந்த ஆட்சியை எவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வருகிறமோ அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு நல்லது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. 2014ல் புகார் கொடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை சிறையில் தள்ளுவோம் என ஸ்டாலினே 2018-ல் பேசியிருக்கிறார். அவர் எடுத்த சபதம் தற்போது நிறைவேறியிருக்கிறது. அதற்காக ஸ்டாலின் சந்தோஷப்பட வேண்டும்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் இதை ஒத்துக்கொள்ளவில்லை. செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு கூட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. பாஜகவிற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் என்று இப்போதே நான் சொல்லகூடாது. பாஜகவை சீண்ட வேண்டாம். பாஜக நிர்வாகிகளை கோபப்படுத்த வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுரையாக சொல்கிறேன்.
விஜய் அரசியலுக்கு தாரளமாக வரலாம். அவரை வரவேற்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை நாம இதுவரை பார்த்தது என்னவென்றால் திரை நட்சத்திரம் என்பதால் மட்டுமே எம்.ஜி.ஆர் ஜெயிக்கவில்லை. அதற்கு முன்பாக பல ஆண்டுகளாகவே அவர் அரசியலில் இருந்தார். அதேபோலத்தான் ஜெயலலிதாவும். எனவே விஜய் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அரசியலுக்கு வருவது அவரோட உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications