ராஜ ராஜன் இந்துவானு பஞ்சாயத்து போகுது! ஆனா.. அவர் சமாதியே சந்துல தான் இருக்கு! பொங்கிய நடிகர் சாம்ஸ்
சென்னை : சோழ மன்னர் ராஜராஜ சோழன் இந்துவா? இல்லையா? என விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் சமாதியே ஒரு சந்தில் இருப்பதால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்துப் பேசிய கருத்துகள் தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக இருக்கிறது. நடிகர்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை இரு அணியாக பிரிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்," திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது" என பேசினார்.

வெற்றிமாறன்
மேலும்," சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்'' என்றார்.

ஆதரவும் எதிர்ப்பும்
இயக்குனர் வெற்றிமாறனின் கருத்துக்கு நடிகர்கள் ஒருபுறம் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் கருணாஸ் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில் சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

பலத்த விவாதம்
இதேபோல காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல கட்சியினர் வெற்றிமாறனுக்கு ஆதரவாகவும், பாஜக அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் வெற்றிமாறனுக்கு எதிராகவும் கருத்திட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது திருவள்ளுவர், வள்ளலார் உள்ளிட்டோர் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து என்ற மதம் உள்ளதா? என சிலர் சமூக வலைதளங்களிலும் அரசியலிலும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

காமெடி நடிகர் சாம்ஸ்
இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள பிரபல காமெடி நடிகரான சாம்ஸ்," மன்னர் ராஜராஜா சோழன் இந்துவா? இல்லையா? என விவாதங்கள் எழுந்துள்ளது. அவரு சமாதியே ஒரு சந்தில் இருப்பதால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . மத்திய அரசோ அல்லது மாநில அரசு நினைவிடத்தை சீரமைத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications