நடிகர் விஜய் சொன்ன அட்வைஸ்- சென்னை ஈ.சி.ஆரில் ரூ40 கோடியில் பிரமாண்ட பங்களா வாங்கிய ரஜினி மருமகன்!
சென்னை: நடிகர் விஜய் கொடுத்த யோசனைப்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ40 கோடியில் பங்களா வாங்கி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தொழிலதிபர் விசாகன்.
Recommended Video
அரசியலுக்கு வருவாரா? இல்லையா? தனிக் கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்கிற அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். இனி அரசியல் பேச்சுக்கே இடம் இல்லை அறிவித்தார்.
அத்துடன் அரசியலுக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் மன்றங்களையும் கலைத்துவிட்டார் ரஜினி. இந்த நிலையில் ரஜினி குடும்பத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

செளந்தர்யா மறுமணம்
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ஏற்கனவே விவாகரத்தானவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்தார். இந்த மறுமணம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தொழிலதிபர் விசாகன்
செளந்தர்யா மறுமணம் செய்த விசாகனின் தந்தை வணங்காமுடி, அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர். பல ஆயிரம் ரூபாய் கோடிகளுக்கு அதிபதி. மிகப் பெரிய தொழிலதிபரான விசாகன்- செளந்தர்யா திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தவர் மாஜி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒருவர்தான்.

விசாகன் திட்டமும் விஜய் போனும்
அண்மையில் விசாகன் ஒரு புதிய பிரமாண்ட பங்களாவை வாங்க திட்டமிட்டார். இதனை கேள்விப்பட்ட உடனேயே விசாகனுக்கு போனடித்து ஒரு யோசனை சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய்.

சினிமா பிரபலங்கள் ஏரியா
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதி சினிமா பிரபலங்களின் ஏரியாக உருமாறிவிட்டது. நடிகர் விஜய் இங்குதான் குடியிருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவும் இந்த பகுதியில்தான் வசிக்கிறார். இந்த ஏரியா இப்போது ரொம்ப காஸ்ட்லியாகிவிட்டது.

ரூ40 கோடியில் பிரமாண்ட பங்களா
இதனால் விசாகனிடம் தமது பங்களா அருகே உள்ள பங்களா விலைக்கு வருகிறது.. அதை வாங்குகளேன் என சொல்லியிருக்கிறார் விஜய். இந்த யோசனயை ஏற்றே சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான பங்களாவை வாங்கியிருக்கிறார் விசாகன். இந்த பங்களாவின் மதிப்பு ரூ 40 கோடி!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications