''எங்களுக்கு மானமும் அறிவும் கிடையாதா?''.. நடிகர் சந்தானத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்
சென்னை: நடிகர் சந்தானம் நடித்து வெளிவந்துள்ள டிக்கிலோனா படத்தில் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்துள்ளதாக கூறி அவருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடிகர் சந்தானம் அவர்களுக்கு ஓரு வார்த்தைங்க!! நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை விலக்கி, மனதை இலகுவாக்கும் தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் ஒரு குழந்தையின் சிரிப்பை போல, தாயின் மடியை போல, அன்புக் காதலியின் பொன் முகத்தை போல!!
அப்படி இல்லாமல் மனதை நோகடிக்கும் விஷயமாக இருக்க கூடாது. ஏதோ இயற்கையின் வினையால் ஏற்பட்ட உடல் பாதிப்பை, நகைச்சுவைப் பொருளாக்கி காட்சிப்படுத்துவது நல்ல ஒரு சமூகத்தின் பண்பு இல்லை.

எங்களுக்கு மானம் கிடையாதா?
3200 ஆண்டுகளாக இந்த மண்ணில் நாகரீகமாக வாழும் தமிழ்ச்சமூகம், உடல் குறைபாட்டை "கிண்டலடிக்கிறது " என்பது நம்மை நமது வருங்கால சந்ததிகள் பிற்போக்காளர்கள் என்றல்லவா அழைக்க வகை செய்யும். பகுத்தறிவு வேண்டும் என்று உலகுக்கே எடுத்து சொல்லும் நாம், இப்படியா இயற்கை அன்னையின் சரிசமமான பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகளை கிண்டலடிப்பது? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு! என்று சொன்ன அறிவுத்தந்தை பெரியார் வழியாக கேட்கிறேன் எங்களுக்கு "மானமும் அறிவும் கிடையாதா?

மாற்றுத்திறனாளிகள்
நடிகர் சந்தானம் அவர்களே!!! தற்போது வெளிவந்துள்ள் "டிக்கிலோனா" என்ற திரைப்படத்தில் கம்பூன்றி நடக்கும் எங்களை " சைடு ஸ்டாண்டு " போட்டு நடக்கிறோம் என்று எங்களை உருவக்கேலி செய்துள்ளீர்கள். ஒன்று தெரியுமா சந்தானம் அவர்களே!! தமிழ் வளர்த்த மூதாதைகள் பலர் கம்பூன்றி வளர்த்தவர்கள் தான்!!
கம்பூன்றி நடக்கும் பல மாற்றுத்திறனாளிகள் நம் நாட்டின் பெருமையை உலக நாடுகள் மத்தியில் சிறப்பாக கொண்டு சென்று மெடல் பல பெற்றுவந்துள்ளனார் அதிலும் பாருங்க ஊனம் இல்லாதவர்களைவிட எங்கள் மக்கள் அதிகமாக வெற்றி பெற்று வந்துள்ளனார்.

சிந்தித்து பாருங்கள்
ஐயா!! சின்னதாக காலில் அடிபட்டாலோ அல்லது காலணி கிழிந்தாலே நடக்க சரமப்படும் மக்களின் நடுவல் ,ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் தத்தி தத்தி நடக்கும் போது ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போது தரையை நோக்கி உடலை முன்னோக்கி செலுத்தி, அடுத்த அடி எடுத்து வைக்க, உடலை திரும்ப மேல் நோக்கி தூக்கினால தான் அவரை அவரே நகர்த்த முடியும். இத்தனை நடக்க வேண்டுமானால் உடலின் தசை நார்கள் எவ்வளவு வேலை பார்க்க வேண்டும் சிந்தித்து பாருங்கள்!.

எதிர்நீச்சல் போடுபவர்கள்
ஒரு அடி எடுத்து வைக்கவே இத்தனை சிரம்ப்படும் தோழர்கள், இத்தனையையும் ஏற்றுக்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போடுபவர்கள் உண்மையில் "போராளிகள்". அவர்களை இப்படி இழிவாக நகைச்சுவைக்கு உட்படுத்துவது ஏற்புடையதல்ல. இதைப்பற்றி நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம் அதேநேரம் எங்கள் கண்டனத்தையும் இந்த வேளையில் கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம். பேசவேண்டிய ஊடகங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து பேச வேண்டும் என்பதையும் கோரிக்கையாக முன்வைக்கிறோம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications