மன்னிப்பு நஹி.. ஜெய் பீம் விஷயத்தில் ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அதிரடி
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
இதற்கு முன்பு கண்டிராத அளவுக்கு அன்பு வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போய் விட்டதாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் இன்று தெரிவித்திருக்கிறார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனர் ஞானவேல், இந்த திரைப்படத்தை வெளியிட்ட அமேசான் இணையதளம் உள்ளிட்டவற்றுக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .

வன்னியர் சங்கம்
24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கெடு முடிந்து விட்டது. இருப்பினும் நடிகர் சூர்யா அல்லது படக்குழுவினர் அதுபோன்ற எந்த ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை.

அன்புமணி ராமதாஸ்
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு நடிகர் சூர்யா பதிலளித்திருந்தார். அதிலும் அவர் வருத்தம் என்ற வார்த்தை அல்லது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. திரைப்படத்தில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்ற தொனியில் அவரது அறிக்கை இருந்தது.
Recommended Video

பாமக நிர்வாகி அறிவிப்பு
இந்த நிலையில்தான் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகி ஒருவர் அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் பிறகு திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகத்திலிருந்து சூர்யாவுக்கு ஆதரவாக குரல்கள் வரத்தொடங்கின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார் நடிகர் சூர்யா.

சூர்யா ட்வீட்
இந்த நிலையில் இன்று ஒரு ட்விட்டர் பதிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது. நான் இதற்கு முன்பாக இப்படி அனுபவித்தது கிடையாது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, எனது நன்றி உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறேன். எங்களோடு துணைக்கு நிற்கும் உங்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று ஆங்கிலத்தில் ட்வீட் செய்து இருக்கிறார் சூர்யா. இதன் மூலம், வருத்தம் தெரிவிக்கும் எண்ணத்தில் சூர்யா இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications