என் செருப்பு சைஸ் 41..தைரியம் இருந்தா நேர்ல வா? ட்விட்டரில் சீண்டியவரை விளாசிய குஷ்பு? என்னாச்சு?
சென்னை : தனது அண்ணனின் மறைவு குறித்து பதிவிட்டிருந்த ட்வீட்டுக்கு கிண்டலாக பதிவிட்ட நபருக்கு எனது செருப்பு சைஸ் 41 தைரியம் இருந்தால் நேரில் வா? என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
குஷ்பு என்ற பெயரை தற்போது வரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் 190களில் தொடங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் துறையில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார் குஷ்பு.
சின்னத்தம்பி படம் தொடங்கி அண்ணாமலை, நாட்டாமை, என தமிழில் பல பிளாக்பாஸ்டர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது என்றால் அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான்.

நடிகை குஷ்பு
அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக வலம் வந்தார். நடிகை குஷ்பு சுந்தர்.சி.யின் இயற்பெயர் நகத் கான். 1980ல் சினிமா துறைக்குள் நுழைந்த அவர், தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல் முதல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நாயகியாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் சினிமா துறையில் குஷ்பு மிக முக்கியமான நடிகையாக கோலோச்சிய அவர், நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார்.

மிகவும் பிசி
அப்போது சினிமாவுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். பல படங்களில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் அக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வந்தார். மிகவும் பிசியான நடிகையாக இருந்த போதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில் அவர் வழங்கிய கேம் ஷோ அப்போதே பலத்த வரவேற்பை பெற்றது.

அரசியல்
தொடர்ந்து சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிசியாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2014ல் வந்த கட்சியிலிருந்து வெளியேறிய அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்து அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒரு பக்கம் திரைப்படம் இன்னொரு பக்கம் அரசியல் மற்றொரு பக்கம் குடும்பம் என பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுபவர் குஷ்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக உடல் எடையுடன் இருந்த அவர் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அண்ணன் மரணம்
அதே நேரத்தில் சில நேரங்களில் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை விமர்சிப்பவர்களுக்கு கடும் பதிலடி கொடுப்பதும் வழக்கம். அதுவும் அதிரடியாகத்தான் இருக்கும். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் மறைந்து விட்டார் என மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தார் நடிகை குஷ்பு. "வாழ்க்கை பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது என வருத்தத்துடன் பதிவுட்டுள்ளார். மேலும், அவருடைய அன்பும், வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், எனது சகோதரருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டிருந்தார்.

செருப்பு சைஸ்
இன்றும் உறவுகளின் மறைவு மிக ஆழமான வலியை கொடுக்கிறது என்று தனது அண்ணனின் மரணம் குறித்து மிகுந்த மனவேதனையுடன் குஷ்பு பதிவிட்டு இருந்தார் அப்போது ட்விட்டர்வாசி ஒருவர் 'அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்துருச்சு' என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதனால் கோபமான நடிகை குஷ்பு,"என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தால் நேரில் வா.. இதுதான் உங்கள் கீழ் தனமான புத்தி! மாறவே மாட்டீங்களாடா.. நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.. அறிவாலயம் இது உங்கள் கட்சி உறுப்பினர்.. அவர்களால் இதைவிட கீழே செல்ல முடியுமா? என பதிவிட்டு இருக்கிறார். இதனையடுத்து அந்த நபர் அந்த கமெண்டை டெலீட் செய்து விட்டார்.












Click it and Unblock the Notifications