சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிரை பணயம் வைப்பார்களா?.. மாஜி திமுக எம்எல்ஏவுக்கு கஸ்தூரி சுளீர் கேள்வி

முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் குறித்து கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கஸ்தூரி தெறிக்க விட்ட ஒரு ட்வீட்டுக்குத்தான் இப்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்குக்காக, திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 வருட சிறை தண்டனை கிடைத்தது.

இதில் மற்றொரு நல்ல தகவல் என்னவென்றால், இந்த தீர்ப்பு வந்த நேற்றுதான், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் மரண தண்டனை என்ற சட்டத்திருத்த தகவலும் வெளியானது. இந்த இரட்டிப்பு கருத்து குறித்து நடிகை கஸ்தூரி ஒரு கருத்தினை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அறிவுஜீவிதனம்

அறிவுஜீவிதனம்

பொதுவாக நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து கொண்டு, அவற்றை மிச்சம் வைக்காமல் கலாய்த்து வருபவர் கஸ்தூரி. சில சமயம், இவர் அறிவுஜீவிதனம் என்ற பெயரில் உளறி கொட்டி, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளவும் செய்வார்.

கிராதகர்கள்

ஆனால் வழக்கம்போல் இல்லாமல் முன்னாள் எம்எல்ஏ சம்பந்தமாக கஸ்தூரி நீண்ட ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் "ஒரு குழந்தையை கூட்டாக கற்பழித்து கொலையும் செய்த கிராதர்கர்களுக்கு வெறும் 10 ஆண்டு சிறை, 42000 அபராதம். என்ன சட்டமோ என்ன தர்மமோ.

ஒப்புதல்

ஒப்புதல்

வறுமையின் காரணமாக கேரளாவிலிருந்து வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை அப்போதைய பெரம்பலூர் திமுக ராஜ்குமாரும் அவர் சகாக்களும் சேர்ந்து சீரழித்த குற்றத்துக்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது. இன்று புதிய கடுமையான போஸ்கோ சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதன்படி, குழந்தைகளை பாலியல்கொடுமை செய்பவர்களுக்கு மரணம் கிடைக்கும்.

கஸ்தூரி சவால்

கஸ்தூரி சவால்


இந்த புதிய சட்டம் அமுலாக்கப்போகிறது என்பதனால் தான் இத்தனை வருடம் வழக்கில் வாய்தா வாங்கி கொண்டிருந்த முன்னாள் திமுக ராஜ்குமார் முதலானோர் இப்பொழுது அவசரம் அவசரமாக தண்டனையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து மேல் முறையீடு செய்வார்களா? பார்ப்போம்" என்று
கஸ்தூரி சவால் விட்டுள்ளார்.

உயிரை பணயம் வைக்க தயாரா என்று கஸ்தூரி கேள்விகேட்ட இந்த ட்வீட்டினை பலரும் வரவேற்று வருகின்றனர்.

English summary
Actress Kasthuri's twitter status about former DMK MLA RajKumar's Sentence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X