’லண்டன் வீடு’ மண்டையில் மூளை இருக்கா? ட்விட்டரில் வறுத்தெடுத்த பாஜக குஷ்பு! என்னங்க ஆச்சு?
சென்னை : நடிகையும் தற்போது பாஜகவில் இணைந்து அரசியல்வாதியாக மாறி உள்ளவருமான குஷ்பு லண்டனில் புதிய வீடு வாங்கியுள்ளதாகவும் அவர் இந்தியாவை விட்டு வெளியேறியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை மூளை இருக்கிறதா என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் குணசித்திர பாத்திரங்களில் நடித்தும் முக்கிய இடம் பிடித்தவர் நடிகை குஷ்பு.
இவர் நடிகர் பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் நடித்த அண்ணாமலை, சரத்குமாருடன நாட்டாமை என நடித்த அடுத்தடுத்த படங்கள் அதிரிபுதிரி ஹிட் ஆகிய நிலையில் தற்போது வரை தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகை குஷ்பு
ரஜினி கமல் உள்ளிட்ட மூத்த நாயகர்களுடன் நாயகியாக கரம் கோர்த்த அவர் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் இதனிடையே திமுக காங்கிரஸில் இருந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் அவர் பாஜக குறித்தும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் காரசாரமான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

லண்டன் வீடு
சினிமாவில் இருந்தாலும் சரி அரசியலில் இருந்தாலும் சரி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக சற்று உடல் பருமனோடு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து இருக்கும் நிலையில் அது தொடர்பான சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பலரும் குஷ்புவை புகழ்ந்து தள்ளினர். இந்த நிலையில் அவர் லண்டனுக்கும் அடிக்கடி சென்று வந்தார். தற்போது அவர் லண்டனில் வீடு வாங்கி இருப்பதாக பரவும் தகவல் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.

லண்டனில் செட்டில்?
நடிகை குஷ்பு லண்டனில் புது வீடு வாங்கியுள்ளதாகவும் அங்கே பால் காய்ச்சி அதில் டீ குடிக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் லண்டனுக்கு சென்று வந்த நடிகை குஷ்பு தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா என்றும் புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் எனவும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மகளின் படிப்புக்காக குஷ்பு அங்கேயே தங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமர்சனம்
இந்நிலையில் நடிகை குஷ்பு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் எனவும் லண்டனிலேயே இனிமேல் செட்டில் ஆகி விடுவார் எனவும் பலர் விமர்சனங்களையும் முன் வைத்தனர். குறிப்பாக ஒருவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை பாஜகவினர் தற்போது தான் புரிந்து கொண்டுள்ளார்கள் போல என கூறியிருந்தார். இதனால் அவரை மண்டையில் மூளை இருக்கா என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை குஷ்பு.

பதிலடி கொடுத்த குஷ்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," லூசர்!! நான் என் நாட்டை விட்டு வெளியேறவில்லை. நான் உன்னை விட என் நாட்டை நேசிக்கிறேன். முட்டாள்தனமான உங்களுக்கு எப்படிப்பட்ட கல்வி இருந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது வெறும் ட்ரோல் செய்ய படித்தவரா?? உங்களுடன் இருக்கும் காட்டு விலங்குகளுக்கு கூட உங்களை விட அதிக மூளை இருக்கிறது என்று நான் நம்புகிறேன் சகோ." என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications