சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’அங்க’ இருந்துதான் வரேன்! போய் ஏதாவது வேலை இருந்தா பாருங்க! ட்விட்டரில் சீண்டியவருக்கு குஷ்பு பதில்!

Google Oneindia Tamil News

சென்னை : நல்ல சூழ்நிலையில் வளர்ந்த பெண்கள் யாரும் 'பாலியல் ஜல்சா கட்சி'யில் இருக்க மாட்டார்கள் என மக்கள் ஆவேசம் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நபருக்கு போய் ஏதாவது வேலை இருந்தா பாருங்க என நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்திருக்கிறார்.

சென்னை ஆர்கேநகர் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்பி கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

 மருத்துவமனை ப்யூன் அட்டகாசம்.. 16 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை மருத்துவமனை ப்யூன் அட்டகாசம்.. 16 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை

சைதை சாதிக்

சைதை சாதிக்

இந்நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக குஷ்பு விட்டுவிட மாட்டார் போல இருக்கிறது.

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஆவேசம்

ஆவேசம்

எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாருமே இப்படி பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டார்கள். பெண்களை குறித்து தவறாக பேசும்போது அதை அமர்ந்துகொண்டு ரசிக்கவும் மாட்டார்கள் என பேசி இருந்தார்.

ட்விட்டரில் பதிலடி

ட்விட்டரில் பதிலடி

இந்நிலையில் நடிகை குஷ்பு பற்றி ட்விட்டரில் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார். 'நல்ல சூழ்நிலையில் வளர்ந்த பெண்கள் யாரும் பாலியல் ஜல்சா கட்சியில் இருக்க மாட்டார்கள் என மக்கள் ஆவேசம்' என சாணக்கியன் என்ற பெயரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு," தம்பி அங்கிருந்து வந்தவள் நான்.. அவங்கள பத்தி என் கிட்ட சொல்றீங்களா?? போய் ஏதாவது வேலை இருந்தா பாருங்க.. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க' என பதிலளித்துள்ளார்.

English summary
Actress Khushbu has responded to twitter post that none of the women who grew up in a good environment will be in the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X