பட்டியலின மக்கள் குறித்து அவதூறு.. விசாரணைக்கு ஆஜராகாத “சூப்பர் மாடல்”.. மீரா மிதுன் அதிரடியாக கைது!
சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய நடிகை மீரா மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடிகர்கள் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சை மீரா மீதுன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன் பட்டியல் இன சமூக மக்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அவதூறாக பேசிய வழக்கு
இந்த புகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சர்ச்சை நடிகை மீரா மிதுனை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர்.

அதிரடி கைது
இந்த நிலையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்த அவரை கைது செய்துள்ள சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் மீது உள்ள மோசடி புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications