சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறு.. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

பார்த்தாலே பீபி ஏறுதே...இந்த மாதிரி எல்லாம் டாஸ்க் எங்க இருந்துதான் கண்டுபிடிக்கிறார்களோ?? பார்த்தாலே பீபி ஏறுதே...இந்த மாதிரி எல்லாம் டாஸ்க் எங்க இருந்துதான் கண்டுபிடிக்கிறார்களோ??

வழக்கு

வழக்கு

இதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணைக்கு மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகும்படியும் நடிகை மீரா மீதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இருப்பினும், விசாரணைக்கு ஆஜராகாமல் மீரா மீதுன் தலைமறைவானர்.

கேரளாவில் கைது

கேரளாவில் கைது

அவரை தீவிரமாகத் தேடி வந்த போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வைத்து மீரா மிதுனை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது.

ஜாமீன் மனு

ஜாமீன் மனு

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மீரா மிதுனும் மற்றும் சாம் அபிஷேக் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பல நாட்களாகத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால்
தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென மீரா மிதுன் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பதாகவும் முதல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கோவில் காரணமாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Actress Meera Mithun latest update. Bail for Actress Meera Mithun
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X