என்னங்க இது.. தெற்கைக் கேட்டால் வடக்கைக் கொடுத்து.. பாஜக தலையில் இடியை போட்ட அதிமுக..!
சென்னை: பாஜகவுக்கு செம செக் ஒன்று வைத்துள்ளது அதிமுக.. முக்கிய பகுதியான கோவையில் பாஜக கேட்ட தொகுதியைக் கொடுக்காமல் வேறு தொகுதியை ஒதுக்கி அதிர வைத்துள்ளது.. இதனால் பாஜக செம அப்செட்டில் உள்ளது.
கொங்கு மண்டலத்தில் அதிமுகதான் பலமாக இருக்கிறது.. இதை பாஜகவினரே ஏற்று கொள்வதுண்டு.. ஆனால், கோவையில் பாஜகவுக்கு செல்வாக்கு ஓரளவாவது இருந்து வருகிறது..
அதேபோல, இந்து அமைப்புகளும் அங்கு சற்று பலத்துடனேயே உள்ளன.. எனவே கோவையில் சீட் வாங்கினால் நிச்சயம் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருந்து வருகிறது.

பாஜக
அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் 3 தொகுதிகளை பாஜக குறி வைத்திருப்பதாக சொல்லப்பட்டது.. அண்ணாமலை, கிணத்துக்கடவு தொகுதியை குறி வைப்பதாகவும், பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியை குறி வைத்திருப்பதாகவும், சிபி ராதாகிருஷ்ணனும் கோவையிலேயே போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. பாஜகவின் மாநில செயலாளர் செல்வக்குமார் உட்பட பலரும் இந்த கோவைக்குத்தான் போட்டி போட்டி வருகின்றனர்.

அறிவிப்புகள்
ஆனால், அதிமுக கோவையில் தெற்கைத் தரவில்லை.. மாறாக வடக்கு தொகுதியை மட்டும் கொடுத்துள்ளது. கூடுதலாக புறநகரான சிங்காநல்லூரை ஒதுக்கியுள்ளது.4 ஆண்டு கால ஆட்சியில் கோவை மண்டலத்தில் அதிமுக படுஸ்டிராங்காக உள்ளது.. ஏகப்பட்ட அறிவிப்புகளையும், திட்டங்களையும் கொங்கு மண்டல பகுதி மக்களுக்கு வாரி வழங்கி உள்ளது.. இதைதவிர, இங்குள்ள பிற ஜாதியினரின் அதிருப்திக்கு ஆளாகாமல், அவர்களுக்கான நலத்திட்டங்களை வாரி வழங்கி போதுமான வாக்குகளை தக்க வைத்துள்ளது.

அம்மன் அர்ஜூனன்
இந்நிலையில், இன்று அதிமுக தரப்பில் ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. அதில் கோவை தொகுதியில் அதிமுகவே நேரடியாக களமிறங்குகிறது.. இதற்கு காரணம், திமுகவை இந்த முறையும் கோவையில் தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான்.. எனவே,தான், அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆக இருக்கும் அம்மன் அர்ஜுனனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

வானதி சீனிவாசன்
அதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார் அம்மன் அர்ஜுனன்.. இவர் வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.. சமுதாய வாக்குகள் ஒருபக்கம் குவியும் என்பதால், அதிமுகவுக்கு இது மேலும் வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், பாஜகதான் அதிர்ந்து போய் உள்ளது.. வானதி முதல் ராதாகிருஷ்ணன் வரை இந்த தொகுதி மீது குறியாய் இருந்தனர். இப்போது அதிமுகவே போட்டியிடுவதால், பாஜக - அதிமுக கூட்டணி உறவில் விரிசல் வருமா? அல்லது சுமூகமாகவே 2 தரப்பும் போய்விடுமா என்று தெரியவில்லை..!