சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தற்காலிகம்"தான்.. அமைச்சர் சொன்ன அந்த வார்த்தை.. ராமதாஸுக்கு ஷாக்.. பாமக தலையில் இடி? என்னாக போகுதோ

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து ஆர்பி உதயகுமார் பேச்சு அதிர்ச்சியை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசிய பேச்சு, பாமகவை அதிர வைத்துள்ளது.

எப்போதுமே தேர்தல் என்றால், பாமக முன்கூட்டியே ரெடியாகிவிடும்.. அல்லது திமுகவோ, அதிமுகவோ யாராவது ஒருத்தர் தைலாபுரத்துக்கு சென்று, பேச்சுவார்த்தையை துவங்கிவிடுவர்..

முதல் கட்சியாக பாமகவை தங்கள் கூட்டணியிலும் சேர்த்து கொள்வர். பாமக எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணி வெற்றி பெறும் என்பது பொதுவான கருத்து.

 போராட்டங்கள்

போராட்டங்கள்

இந்த முறையும் அப்படித்தான் அதிமுக தயாரானது.. ஆனால், 4 மாசத்தக்கு முன்பேயே டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தை கையில் எடுத்துவிட்டார்.. பல கட்ட போராட்டங்களையும் நடத்தினார்.. இடஒதுக்கீடு குறித்து நல்ல முடிவை சொல்லாமல், பாமகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்ற முடிவுக்கு அதிமுக அரசு வந்தது.

 மீதி பாதியா?

மீதி பாதியா?

இறுதியில் 20 சதவீத இடஒதுக்கீட்டில் பாதியை ஒதுக்கி தீர்மானம் போட்டது.. ஆனால், ஒரு சாதியினருக்கே 10.5 என்றால், மற்றவர்களுக்கு மீதி பாதியா? என்று பிற சமூகத்தினர் கொந்தளித்து போயுள்ளனர்.. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிருப்தி மக்களுக்கு உள்ள நிலையில், அதிமுக அரசுக்கு இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் மேலும் தலைக்கு மேல் அடியே விழுந்துள்ளது. பிற சமூகத்தினரின் கோபம், அதிருப்தியை எளிதாகவே அதிமுக பெற்றும் வருகிறது.

பாமக

பாமக

இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் இதை பற்றி பேசியுள்ளார். திருமங்கலம் அருகே சவுடார்பட்டியில் பிரச்சாரம் செய்தபோது, "சட்டசபையில் முதல்வர் அறிவித்த 20% வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.. அது தாற்காலிகமானதுதான்.. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதனால் 6 மாத காலம் தற்காலிக மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அது 6 மாத காலம் மட்டுமே செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

 தற்காலிகம்

தற்காலிகம்

அமைச்சர் சொன்னதை கேட்டு, அப்படியே அதிர்ந்து போய் உள்ளது பாமக.. " டெம்ப்ரவரி" என்பதற்காக இந்த 6 மாசமாக போராட்டம் நடத்தினோம்? என்று நொந்து போயுள்ளது.. இந்த வன்னியர் இடஒதுக்கீட்டை முன்வைத்துதான் வடமாவட்டங்களில் வாக்குகளை பாமகவினர் திரட்டி வந்து கொண்டிருக்கின்றனர்..இதை ஒரு சாதனையாகவே முன்வைத்து பேசியும் வருகின்றனர்.. அப்படி இருக்கும்போது, அமைச்சர் இப்படி பேசியது நிச்சயம் பாமக தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

 சமாதானமா?

சமாதானமா?

அமைச்சர் ஏன் இப்படி பேசினார்? அல்லது அது அவரது சொந்த கருத்தா? முதல்வரின் அனுமதியோடுதான் பேசினாரா? என்றெல்லாம் தெரியவில்லை.. அல்லது மற்ற சமூகத்தினரின் கோபத்தை தணித்து, வாக்குகளை அள்ள இப்படி பேசினாரா என்றும் உறுதியாக தெரியவில்லை.. ஆனால், இடஒதுக்கீடு தற்காலிகமானது, 6 மாதம்தான் செயல்படும் என்று அமைச்சர் சொல்லி உள்ளது, கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும் சூழலையே தந்துள்ளது.. பார்ப்போம்..!

English summary
ADMK Minister RB Udhayakumar Says about Vanniyars Reservation and PMK Shocked
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X