அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்?
சென்னை: அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கிசுப்பையாவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மூலம் தவெகவில் இணைவதற்கு மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி அணியிலும், தவெகவிலும் இணைந்து வருகிறார்கள்.

அனைத்து பிரச்சனைகளும் சரியாகி எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் அணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குள் புதிய பிரச்சனை வெடித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியா, வேலுமணி அணியா என்கிற பஞ்சாயத்தில் இருவரும் வேண்டாம் என்கிற நிலையில் அதிமுகவில் பல எம்எல்ஏக்கள் இருக்கிறார்களாம்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கூறுகையில், ஊழல் வழக்குகள் உள்ள வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை தவெக விரும்பவில்லை. அவர்கள் தவிர சுமார் 10 முதல் 15 எம்எல்ஏக்கள் தவெக பிடியில் உள்ளனர். அடுத்தடுத்து அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணையவுள்ளனர். தவெக பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.
இடைத்தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்" என்றார். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா இருவர் மூலம் தான் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருவரும் அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசி அவர்களுக்கான பதவி, எதிர்காலம் குறித்து உறுதியளித்து வருகிறார்கள். அதனடிப்படையில் தான் கட்சி தாவல்கள் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்! -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
மூத்த அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி.. உடல்நலக் குறைவால் கோவையில் சிகிச்சை! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
பொம்மை சிஎம் விஜய்.. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்! ரவுண்டு கட்டி அடித்த அனிதா ராதாகிருஷ்ணன்!












Click it and Unblock the Notifications