சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரெக்டா "2 மணி" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்?

சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்க போகிறது"ன்னு என்று சசிகலா அன்று வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் சொன்ன விஷயம் விரைவில் அரங்கேற போவதாக கூறப்படுகிறது.

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு திரும்பியதில் இருந்து சசிகலா மவுனம் பெருத்த சந்தேகங்களையும், நிறைய கேள்விகளையும் எழுப்பியபடியே இருந்தது..

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டாலும், சசிகலாவின் அரசியல் ஓய்வு இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை.. அந்த வகையில், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

 பின்னணி

பின்னணி

அப்படித்தான் அவரது தஞ்சை விஜயம் பேசப்பட்டது.. கோயில் கோயிலாக சசிகலா சாமி கும்பிட்டு வந்தாலும், இதற்கு பின்னணியில் உள்ள ஆன்மீக அரசியல் பலரும் அறியாததாகவே பூடகமாக உள்ளது. நேற்றுமுன்தினம்கூட, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றுள்ளார் சசிகலா.. ஜெயலலிதா இருந்தவரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில்தான் சசிகலா தங்கியிருந்தார்.

 வேதா நிலையம்

வேதா நிலையம்

இப்போது இந்த வீடு அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வீட்டுக்கு பக்கத்துலேயே சகல வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டைதான் சசிகலா பார்வையிட்டார்.. அவருடன் விவேக், இளவரசி உள்ளிட்ட சொந்தங்கள் வந்திருந்தனர். இந்த வீடு அப்படியே வேதா நிலையம் போன்ற அமைப்பிலேயே கட்டப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.. சசிகலா ஜெயிலில் இருந்து வருவதற்கு முன்பேயே இந்த வீடு ரெடியாகிவிடும் என்றார்கள்..

 லாக்டவுன்

லாக்டவுன்

ஆனால், இதற்கு நடுவில் லாக்டவுன் போட்டுவிடவும், கட்டட பணிகளில் தொய்வு ஏற்பட்டது.. அதனால்தான், அந்த வீட்டுக்கு இன்னும் சசிகலாவால் செல்ல முடியாத நிலை உள்ளது.. வீடு இப்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளதால், அதை பார்ப்பதற்காக சசிகலா சென்றிருக்கிறார்.. கட்டிட வேலைகளை சீக்கிரமாக முடிக்க சசிகலா அறிவுறுத்தியதாக தெரிகிறது.மொத்தம் 2 மணி நேரம் அங்கேயே இருந்தார்.. இதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணமும் வலம் வருகிறது.

 அதிமுக

அதிமுக

தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வராது என்று தெரிந்துதான் சசிகலா அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தலுக்கு பிறகு வேற ஒரு கணக்கில் சசிகலா இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது தேர்தல் முடிவுக்கு பிறகு, தன்னுடைய தலைமையில் அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா பலமாக நம்புகிறாராம்..

 போயஸ்கார்டன்

போயஸ்கார்டன்

அதனால்தான் தன் ஜெயலலிதா அரசியல் பயணம் தொடங்கிய போயஸ் கார்டனிலேயே தானும் அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே, புதிதாக கட்டப்பட்டு வரும் போயஸ்கார்டன் வீட்டு பணிகளை முடிக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, அந்த வீட்டில் 2 மணி நேரம் ஆலோசனையிலும் ஈடுபட்டாராம்.. இதெல்லாம் எதற்கான அறிகுறி? தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு வேற ஒரு ரிசல்ட் போயஸ் கார்டனில் இருந்து வருமோ? பார்க்கலாம்..!

English summary
ADMK: Whats Sasikalas next Political Target
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X