வலுவிழந்த அசானி புயல்.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? தமிழகத்தில் எங்கே கனமழை இருக்கு?
சென்னை: அசானி புயல் வலுவிழந்துள்ள நிலையில், வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
வங்கக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சீக்கிரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த அது, புயலாகவும் வலுப்பெற்றது.
இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டது. மேலும், இந்த புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர புயலாக வலுப்பெற்றது.

புயல்
முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்த அசானி புயல், மெல்ல அது மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் சென்றது. வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்த இந்த அசானி புயல், திடீரென வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கனமழையானது பெய்தது.

கரையைக் கடந்தது
குறிப்பாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை ஆந்திரப்பிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இது இன்று (12.05.2022) காலை 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவியது.

வலுவிழந்தது
இது இன்று காலை 08:30 மணி அளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எங்கே மழை
அதேபோல நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மின்சாரம்
மேலும், அசானி புயல் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் நல்ல காற்றும் வீசி வருகிறது. கடந்த புதன்கிழமை மட்டும் மாநிலத்தில் காற்றாலை மூலம் 9.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக மின் தேவையும் குறைந்ததால், உபரி காற்றாலை மின்சாரம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகும் மின் வாரிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications