Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத்.. நமது ராணுவத்தை இளமையாக்கிவிடும்.. தேசபத்தியை அதிகரிக்கும்.. அண்ணாமலை ஆதரவு குரல்

அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது ஆயுதப்படையே மேலும் வலுப்படுத்த அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும் என்று பதிவிட்டுள்ளார். தேசபக்தி மற்றும் துணிச்சலான இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    Array

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகிய கால சேவை ஆகிய 2 பிரிவுகளின்கீழ் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறுகிய கால சேவையில் சேருபவர்கள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கலாம். இதுவும் நிரந்தரப் பணிதான். இவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், ஓய்வுக்கு பிறகான ராணுவப் பலன்கள் என அனைத்தும் கிடைக்கும்.

    ராணுவத்தில் அதிகரிக்கும் செலவு

    ராணுவத்தில் அதிகரிக்கும் செலவு

    நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக மட்டும் ரூ.1,19,696 லட்சம் கோடியை ராணுவம் செலவழிக்கிறது. அதாவது, நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர தொகையை கொண்டே தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட ராணுவத்துக்கான பிற செலவுகள் செய்யப்படுகிறது. எனவே, ராணுவத்தில் தேவையில்லாத செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் செய்துவந்தது. அதனடிப்படையில், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

     அக்னிபத் திட்டம்

    அக்னிபத் திட்டம்

    அக்னிபத் திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வித் தகுதியே, அக்னி வீரர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். முதல் 6 மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்.

    அக்னி வீரர்கள்

    அக்னி வீரர்கள்

    2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு
    முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 என மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். இதனுடன் சேர்த்து இதர படிகளும் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும். வீரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான பங்களிப்பு தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக செலுத்தும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரா்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

    முப்படை வீரர்கள்

    முப்படை வீரர்கள்

    அக்னிபத் திட்டத்தின் கீழ், முப்படைகளில் சேரும் வீரர்கள், 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களில் 25 சதவீத அக்னி வீரர்கள் மட்டுமே நிரந்தர பணியில் சேர்க்கப்படுவர். எஞ்சிய 75 சதவீத வீரர்களுக்கு சேவா நிதி வழங்கப்பட்டு வீட்டு அனுப்பி வைக்கப்பட்டு விடுவர். அக்னி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிக்காலம் முடிந்ததும் அவரவருக்குரிய பணி அனுபவ சான்றிதழ் வழங்கப்படும். அக்னி வீரர்களுக்கு என்று தனிப்பட்ட ரேங்க் அமைக்கப்படும்.

    ஓய்வூதியம் இல்லை

    ஓய்வூதியம் இல்லை

    அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. பணிக் காலத்தில் பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து 100 சதவீத மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகை சேமிக்கப்பட்டு முப்படைகளையும் நவீனப்படுத்த முடியும் எனவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவே இத்திட்டத்தை அரசு தொடங்குவதாகத் தெரிகிறது.

    நாடு முழுவதும் போராட்டம்

    நாடு முழுவதும் போராட்டம்


    அக்னிபத் திட்டத்தின் கீழ், பணியில் சேரும் இளைஞர்களிடம் ஒழுக்கம், தேசப்பற்று, ராணுவம் மீதான புரிதல் ஏற்படும் என்றாலும், 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுக்கப்படுவர். மீதமுள்ளவர்களுக்கு நான்காண்டுகளுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பணி நீட்டிப்பாகும் 25 சதவீத வீரர்களுக்குக் கூடுதலாகப் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களையும் அடைவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது. எனவே, 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்ணாமலை ட்விட்டர் பதிவு

    அண்ணாமலை ட்விட்டர் பதிவு

    இதனிடையே அக்னிபத் திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நமது ஆயுதப்படையே மேலும் வலுப்படுத்த அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும் என்று பதிவிட்டுள்ளார். தேசபக்தி மற்றும் துணிச்சலான இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    இளைஞர்களின் திறமை அதிகரிக்கும்

    இளைஞர்களின் திறமை அதிகரிக்கும்

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீரர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பணி செய்வார்கள், முடிந்த பிறகு, 25% அக்னிவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் வழக்கமான பணியாளர்களாகப் பட்டியலிடப்படுவார்கள். இதன் விளைவு வலிமையை அதிகரிப்பது மட்டுமல்ல, அவர்களின் 4 வருட பதவிக்காலத்திற்குப் பிறகு நமது சமூகத்திற்கு உடனடியாகக் கிடைக்கும் திறமைக் குழுவாக செயல்படும் இளைஞர்களை உருவாக்குவது என்றும் பதிவிட்டுள்ளார்.

    அக்னிவீரர்களுக்கு கிடைப்பது என்ன?

    அக்னிவீரர்களுக்கு கிடைப்பது என்ன?

    17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட அக்னிவீரர்களுக்கு தொடக்கத்தில் ஆண்டுக்கு 4.76 லட்சம் வழங்கப்படும், மேலும் 4வது ஆண்டில் சம்பளம் 6.92 லட்சமாக அளவிடப்படும். 10.04 லட்சம் + திரட்டப்பட்ட வட்டி (சேவா நிதி - அக்னிவீர் + GOI பங்களிப்பு) வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது, அக்னிவீரர்கள் தங்கள் பதவிக் காலத்தை முடித்த பிறகு அவர்களுக்குச் செலுத்தப்படும். சேவையின் போது, ​​அக்னிவேர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் பிற ஆபத்து நன்மைகள் கிடைக்கும்.

    காவல்துறையில் முன்னுரிமை

    காவல்துறையில் முன்னுரிமை

    மாநில காவல்துறை ஆட்சேர்ப்புகளில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளனர். இந்த அக்னிவீரர்கள் அனைவரும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுதப் படைகளுடன் தங்கள் செல்வாக்குடன், குடிமக்களுக்குள் நுழையத் தேர்வுசெய்தால், அவர்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டும். ஒழுக்கம், தேசத்தை முதன்மைப்படுத்தும் கலாச்சாரம் மற்றும் திறமை தனித்தன்மையாக திகழும் என்றும் பதிவிட்டுள்ளார். பல நாடுகள் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் இராணுவச் சேவை கொடுப்பதற்காக இராணுவ பணிகளை உருவாக்கியுள்ளன, ஆனால் அதை ஒரு படி மேலே கொண்டு செல்ல இப்போது ‘அக்னிவீரர்கள்' உள்ளனர் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+