சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக-பாஜக கூட்டணி உறுதி.. இந்த 3 தொகுதிகளுக்கும்தான் இழுபறி!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக பாஜக கூட்டணியில் இந்த 3 தொகுதிகள் தான் இழுபறியாம்- வீடியோ

    சென்னை: பாஜக-அதிமுக நடுவே ஏறத்தாழ கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில்தான் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேநேரம், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    ஆனால், பாஜகவுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கப்போகிறது என தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    தொகுதி பங்கீடு

    தொகுதி பங்கீடு

    இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்டவற்றில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஏறத்தாழ, அதிமுக மற்றும் பாஜக நடுவே முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக அதிகபட்சமாக 23 தொகுதிகள் வரை போட்டியிட வாய்ப்புள்ளதாம். பாஜகவிற்கு 10க்கும் குறையாமல் தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

    பாஜகவிற்கு கண்டிஷன்

    பாஜகவிற்கு கண்டிஷன்

    புதிய தமிழகம் உள்ளிட்ட பாஜக தோழமை கட்சிகளுக்கு பாஜக தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். ஆனால், இன்னும் ஒரு விஷயத்தில்தான், இந்த கூட்டணி உறுதியாகாமல் இழுபறியில் நீடிப்பதாக கூறப்படுகிறது.

    3 தொகுதிகளில் இழுபறி

    3 தொகுதிகளில் இழுபறி

    இழுபறி நீடிப்பது தொகுதி பங்கீட்டில்தான். மதுரை, தஞ்சை, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளில் அதிமுக போட்டியிட விரும்பும் நிலையில், அந்த தொகுதிகளை, பாஜகவும் கேட்கிறதாம். இந்த மூன்று தொகுதிகளையும் பங்கிட்டுக் கொள்வதில்தான் அதிமுக-பாஜக நடுவே பெரும் இழுபறி நீடித்து வருகிறது.

    தேமுதிக, பாமக

    தேமுதிக, பாமக

    வரும் 20ம் தேதிக்குள், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது. தேமுதிகவை இந்த கூட்டணிக்கு கொண்டுவந்து 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக ரெடியாக உள்ளது. பாமக இக்கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு தேமுதிகவிற்கு ஈடாக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    AIADMK-BJP alliance is in final stage says sources, and for 3 constituencies the tug of war continues, sources added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X