தோல்விகளை சந்தித்தாலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது ... ஓபிஎஸ் நம்பிக்கை
அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெற்றிபெற்று இருக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது என்று ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

செயற்கையான வெற்றி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது.

மகத்தான வெற்றி
அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

தர்மமே மறுபடியும் வெல்லும்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - தர்மமே மறுபடியும் வெல்லும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும். அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications