மத்தளத்திற்கு 2 பக்கம் தான்.. ஸ்டாலினுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் அடி! ட்விட்டர் ஸ்பேஸில் இபிஎஸ்!
சென்னை : எதைக் கண்டும் அஞ்சும் பழக்கம் அதிமுகவுக்கு இல்லை எனவும், பொம்மை ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் மிகவும் பாவம். அவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் அடி என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இயக்கமான அதிமுக 50 ஆண்டுகளை நிறைவு செய்து 51 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் பேசி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ,அதிமுக அணிகளின் நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட ஏராளமானோர் ட்விட்டர் ஸ்பேஸ் வாயிலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி," தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா பல்வேறு துரோகங்களையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கடந்து தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக மாற்றி இருக்கிறார்.

திட்டங்கள் இல்லை
அம்மா உணவகம், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, தொட்டில் குழந்தை திட்டம், இலவச லேப்டாப், சைக்கிள் என ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கியவர் ஜெயலலிதா. அவர் வழிவந்த அதிமுகவிற்கு எதைக் கண்டும் அஞ்சும் பழக்கம் கிடையாது. திமுகவின் மிரட்டல்களுக்கு அதிமுக இளைஞர்கள் பயப்பட மாட்டார்கள் என நான் நம்புகிறேன். இன்று பிறந்த குழந்தைக்கு பரிசுகள் இல்லை. அம்மா வழங்கிய தாலிக்கு தங்கம் இல்லை.

ஐடி விங் நிர்வாகிகள்
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் இல்லை. பெண்களுக்கு இலவச திட்டங்கள் எதுவும் இல்லை. இரு சக்கர வாகனம் மானியம் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் அதிமுக ஆட்சியில் இல்லை என்பது தான். திமுக செய்யும் தவறுகளை சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் மக்களுக்கு அதிமுகவினர் தெரியப்படுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரமாவது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
சமூக வலைதளங்களில் கண்ணியத்துடன் கருத்துக்களை பதிவிட வேண்டும் நீங்கள் அதிமுகவில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் உடன் இருப்பவர்களுக்கு பகிர்ந்து உங்களை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும். பொம்மை ஆட்சி நடத்திவரும் ஸ்டாலின் மிகவும் பாவம். ஒரு பக்கம் ஆட்சி. மறுபக்கம் கட்சி. இன்னொரு பக்கம் குடும்பம் என தத்தளித்து வருகிறார். மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் அடி என்பார்கள் ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் ஸ்டாலினுக்கு அடியாகத்தான் இருக்கிறது" என பேசினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications