ஆயிரம் பேர் வந்தாலும் ‘அம்மாவுக்கு’ ஈடாகுமா? ஓயாமல் உழைத்தார்களே! உருகிய அதிமுக எடப்பாடி பழனிசாமி!
சென்னை : கனவு, ஆசை, லட்சியம் முதலானவற்றை துறந்து தன் குடும்பதிற்காக மட்டுமே வாழ்பவர் அன்னை என அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய் அன்புக்கு ஈடாகாது. பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.
தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகள் மீது அதிக பாசத்தையும், அன்பையும் கொண்டிருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும், குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும்; அவர்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் கொண்டாடுவதே அன்னையர் தினமாகும். இந்த நன்னாளில், அன்னையரின் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்.
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும், அவர்கள் மீது அன்பை மட்டுமே செலுத்தும் அன்னையரை, வாழ்நாளெல்லாம் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் கருவில் இருந்தே கற்றுத் தருவது அம்மா தான். கனவு, ஆசை, லட்சியம் முதலானவற்றை துறந்து தன் குடும்பதிற்காக மட்டுமே வாழ்பவர் அன்னை.
இத்தகைய போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications