போண்டா மணிக்கு அதிமுக ரூ.1 லட்சம் நிதியுதவி! வீடுதேடிச் சென்று நேரில் வழங்கிய ஜெயக்குமார்!
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள நடிகர் போண்டா மணிக்கு, அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் போண்டா மணி ஒரு அதிமுககாரர் என்பதும் தேர்தலின் போது இரட்டை இலைக்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போண்டா மணியை அதிமுக திரும்பிக் கூட பார்க்கவில்லை என ஒரு வாரத்துக்கு முன்னர் ஒன் இந்தியா தமிழில் செய்தி பிரசுரமாகிய நிலையில், ஓடோடிச் சென்று நிதி உதவி செய்துள்ளது அக்கட்சி.

சிறுநீரகப் பிரச்சனை
நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று இப்போது வீடு திரும்பியுள்ளாற். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அவரது நண்பர்களும், மருத்துவர்களும், சட்டப்படி செய்து வருகின்றனர். இந்நிலையில் உடல் நலிவுற்றுள்ள நடிகர் போண்டா மணிக்கு நடிகர்கள் தனுஷ், சரத்குமார் போன்றோர் தங்களால் இயன்ற தொகையை வழங்கி உதவினர்.

அதிமுக பேச்சாளர்
போண்டா மணி அதிமுகவுக்காக தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ததுடன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அதிமுக தரப்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை என ஒன் இந்தியா தமிழில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று செய்தி பிரசுரித்திருந்தோம். இது அக்கட்சியின் தலைமையை எட்டியதால் ஜெயக்குமாரை அழைத்து நிதி உதவி வழங்கும்படி அறிவுறுத்தல் வந்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள்
இதன் அடிப்படையில் சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ள நடிகர் போண்டா மணி வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் பென்ஞ்சமினும், ஜெயக்குமாரும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். மேலும், நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருக்குமாறு அவர்கள் ஆறுதல் சொல்லியுள்ளனர். இதனால் உற்சாகமடைந்த போண்டா மணி அவர்களுக்கு நன்றி கூறி அனுப்பி வைத்தார்.

நடிகர் சங்கம்
இதனிடையே நடிகர் சங்கம் சார்பில் போண்டா மணிக்கு ஏதேனும் உதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 240 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக போண்டா மணி நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications